மும்பையில் கனமழை: அடியோடு பாதித்த இயல்பு வாழ்க்கை!!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது!

Last Updated : Jul 10, 2018, 05:23 PM IST
மும்பையில் கனமழை: அடியோடு பாதித்த இயல்பு வாழ்க்கை!! title=

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் நேற்றிரவில் இருந்து 200 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என பதிவாகி உள்ளது.  இதனால் ரெயில்வே தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளது.  பயணிகளின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு, தண்டவாளங்களில் இருந்து நீர் வடியும் வரை ரெயில் சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்து உள்ளோம்.  நீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மேற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சாலைகள், ரெயில் தண்டவாளங்கள், விமான ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. மழை தீவிரமடைந்து வருவதால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மும்பையில் இன்னும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Trending News