NEET PG 2023: நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று, பிப்ரவரி 27, 2023 அன்று தொடரும். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பது தொடர்பான மனுக்களை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. மார்ச் 5 என ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தேர்வெழுத வேண்டிய மாணவர்கள் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
பலரின் கோரிக்கைகளை ஏற்று, நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடரவிருக்கிறது. நீட் முதுகலை நுழைவுத்தேர்வுக்கான தேதி, மார்ச் 5 என ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது
மருத்துவர்கள் கோரிக்கை
NEET PG 2023 ஐ ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி, மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டெல்லிய்ல் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் (FAIMA) பதாகையின் கீழ் மருத்துவர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள்.
மேலும் படிக்க | சண்டைக்கார சேவலின் சேவச்சண்டை வீடியோ! தலைதெறித்து ஓடும் நாய்க்குட்டி
நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒடிசா மருத்துவர்கள், அத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், NEET PG 2023 ஒத்திவைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தொடரவிருப்பதால், ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு, மார்ச் ஐந்தாம் தேதியன்று நடைபெறுமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.
தேர்வெழுத வேண்டிய மாணவர்கள் ஏற்கனவே அதற்குத் தயாராகி வருவதாகவும் கூறினார். இந்த நீட் முதுகலை நுழைவுதேர்வை மேலும் தாமதப்படுத்தினால், வேறு பல தேர்வுகளில் பாதிப்பு ஏற்படும் என்று என்றும் சுகாதார அமைச்சர் மக்களவையில் தெரிவித்திருந்தார்..
மேலும் படிக்க | எலோன் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! 200 ஊழியர்களை தட்டித்தூக்கிய டிவிட்டர்! வேலை காலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ