சண்டைக்கார சேவலின் சேவச்சண்டை வீடியோ! தலைதெறித்து ஓடும் நாய்க்குட்டி

Animal Viral Fight Video: நாய்க்கும் சேவலுக்கும் சண்டை வந்தால் என்ன ஆகும்? நாய் தோற்று தலைதெறிக்க ஓடும்? சண்டைக்கார சேவலின் சேவச்சண்டை வீடியோ, இணையதளங்களில் வைரலாகிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2023, 10:57 AM IST
  • வீரியமான வீட்டு விலங்குகளின் சண்டை வீடியோ
  • வைரலாகும் விலங்குகளின் மோதல்
  • வாலாட்டினா ஒட்ட நறுக்கிடுவேன்! எச்சரிக்கும் சேவல்
சண்டைக்கார சேவலின் சேவச்சண்டை வீடியோ! தலைதெறித்து ஓடும் நாய்க்குட்டி title=

Cock Dog Fight: பெரிய விலங்கு தங்களுக்கு சமமான விலங்குகளுடன் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் யாருக்கு வெற்றி, யார் மண்ணைக் கவ்வுவார்கள் என்பதை பலம் தான் நிர்ணயிக்கும். ஆனால் பலம் வாய்ந்த விலங்குகள் பறவைகளுடன் சண்டையிடும்போது, பலவான் ஜெயிப்பான் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், ஆட்டத்தை மாற்றிக் காட்டுவது பலமா இல்லை உருவமா என்பதை உணர்த்தும் வீடியோ வைரலாகிறது.

சமூக ஊடகங்களில் ரீல்ஸ்

மொபைலில் சமூக ஊடக ரீல்களை ஸ்க்ரோலிங் செய்யும்போதெல்லாம், நம்ப முடியாத பல விஷயங்களைப் பற்றிய வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். மிகப்பெரிய விலங்குகள் தங்களுக்கு சமமான விலங்குகளுடன் சண்டையிடுவதை பார்த்திருக்க வேண்டும், ஆனால் கடுமையான விலங்குகள் பறவைகளுடன் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 

விலங்குகளின் மோதல்

சிறிய மற்றும் பெரிய விலங்குகளுக்கு இடையிலான சண்டை எப்படி இருக்கும்? சிங்கம்-யானை, சிறுத்தை-புலி மற்றும் பல விலங்குகள் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருந்தால் அதை மறக்க மாட்டீர்கள். ஆனால், கோழி மற்றும் நாய் சண்டையிடுவதை அடிக்கடி பார்த்திருக்கவும் வாய்ப்பு உண்டு, அதேபோல, அதை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்றும் தோன்றியிருக்கும்.

மேலும் படிக்க | சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தும் எருமை வீடியோ வைரல்! பரிதவிக்கும் விலங்கின் பரிதாபம்

நாய்க்கும் சேவலுக்கும் இடையே கடும் சண்டை

சேவலுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சண்டையின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, வைரலாகி வரும் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது, இதற்குக் காரணம், பயந்த நாயை சண்டை போட்டு விரட்டிய சேவலுக்குள் இருக்கும் தைரியம்தான்.

இதைப் படிக்க உங்களுக்கு சற்று விசித்திரமாக இருக்கும், ஆனால் இது நூறு சதவீதம் சரியானது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தெருச்சண்டை போட்டுக் கொள்ளும் சேவலும் நாயும் வைரலாகின்றன.

சேவலுக்கும் நாய்க்கும் மோதல் வந்தது, நாய் சேவலைத் தாக்க முயற்சிக்கிறது, ஆனால், அசராமல் நின்று சண்டையிடும் சேவல், பின்வாங்கத் தயாராக இல்லை. .

இறுதியில் என்ன நடந்தது?

சேவல் தனது அலகினால், நாயை தொடர்ந்து தாக்குவதை பார்த்தீர்களா? நாயின் தாக்குதலைவிட சேவலின் தாக்குதல் வீரியமாக இருப்பதைக் காட்டும் வீடியோவின் முடிவில் தான் கிளைமாக்ஸ் இருக்கிறது.

ஒரு கட்டத்தில், சேவலை சமாளிக்க முடியாத நாய், அங்கிருந்து, செல்ல ஆரம்பித்தாலும் சேவல் அவரை பின்தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தது. நாய் மீண்டும் சண்டையிட ஆரம்பித்து கடைசியில் தாக்குதலை சமாளிக்க முடியாத நாய் ஓடியோப் போய்விட்டது.

வீரத்தை பறைசாற்றிக் கொண்டு, ‘கொக்கரக்கோ’ என கும்மாளமிடுகிறது கொண்டைச் சேவல்...

மேலும் படிக்க | Diamond Beach: கோல்ட்ன் பீச் சென்னையில்! வைரம் கொட்டிக்கிடக்கும் கடற்கரை எங்கு? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News