மோடி அமைச்சரவையில் மாற்றம்- 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

Last Updated : Sep 3, 2017, 11:34 AM IST
மோடி அமைச்சரவையில் மாற்றம்- 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் title=

மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவாக்கம் செய்யவுள்ளார். இந்த விரிவாக்கத்தின்போது, 9 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கின்றனர். அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களில், ஹர்தீப் சிங் புரி, முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஆவார். தற்போது ஆர்ஐஎஸ் அமைப்பின் தலைவராக உள்ளார். சத்யபால் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அல்போன்ஸ் கன்னன்தானம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

கடந்த 2014 மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது 3-வது முறையாக இன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் தற்போது 72 அமைச்சர்கள் உள்ளனர். லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையில் 15% வரை அமைச்சர்களை நியமிக்கலாம். புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் 81 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.

பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை சீனாவுக்கு புறப்படுகிறார். அதற்கு முன்பு அவர் இன்று காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Trending News