NoroVirus: கேரளாவில் வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு

குடிநீர், கிணறுகள் மற்றும் சேமிப்பு தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு குளோரினேஷன் செய்ய வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 10:59 AM IST
NoroVirus: கேரளாவில் வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு title=

கேரளாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் இன்னமும் கட்டுக்குள் வராதநிலையில் வயநாட்டில் 13 பேருக்கு நோரோவைரஸ் (NoroVirus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

காதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் கேரள சுகாதாரத் துறையினர் வயநாட்டில் தொற்றின் தீவிரத்தை ஆராய்ந்தனர். நோரோவைரஸ் (NoroVirus) குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ்,

ALSO READ: Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்

‘தற்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார், ஆனால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். சூப்பர் குளோரினேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. குடிநீர் ஆதாரங்கள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என கூறினார். 

மேலும் , முறையான தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம், நோயை விரைவில் குணப்படுத்த முடியும். எனவே, நோய் மற்றும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் அனைவரும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நோரோ வைரஸ் என்பது இரைப்பை குடல் நோயை ஏற்படுத்தும் ஒருவகை வைரஸ்களின் குழுவாகும். 

இந்த வைரஸ் வயிறு மற்றும் குடல் வீக்கத்தையும், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமாக இருக்கும் மக்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்படாது. இந்த வைரஸ் தொற்று இளம் குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதிக்கிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும்.

அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுடனான நேரடி தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது. இந்த நோய் வராமல் இருக்க ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்னதாகவும் கைகளை சோப்பால் நன்கு கழுவ வேண்டும். விலங்குகளிடம் பழகுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நோரோ வைரஸின் அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அதிக வெப்பநிலை, தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மற்றும் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ALSO READ: Monkeypox: 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை அச்சுறுத்தும் அரிய வகை நோய்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News