மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி

சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களை கண்காணித்து காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 03:03 PM IST
மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட தொடங்கி விட்டது. 

இதன் காரணமாக மக்கள் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலானோர் கொரோனா நெறிமுறைகளை (Corona Pandemic) பின்பற்றாமல் சுற்றி வருகின்றனர். இதனால், மீண்டும் தொற்று பரவலும் தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன.

இதற்கான தீர்வைக் காண சென்னை மாநகராட்சி சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதென மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னையில் (Chennai) அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களை கண்காணித்து காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ALSO READ: ரேஷன் கடைகள் இடமாற்றம் விரைவில்; தமிழக அரசு புதிய உத்தரவு

கொரோனா ஊரடங்கில் (Lockdown) தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, வார இறுதி நாட்களில் மக்கள் அதிகமாக வெளியே சுற்றித் திரிவதாக புகார்கள் பல வந்தன. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மக்கள் கூடும் இடங்கள், கடைகள், வணிக அங்காடிகள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது. 

சிலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், அதற்கான நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கடைகளிலும் அங்காடிகளிலும் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News