பிரதமர் மோடி நாளை (2022 மே, 26) தமிழகம் வருகை தருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அவர் தனது பயணத்தின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.
பிரதமரின் தமிழக பயணத்தின் போது நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ள மற்றும் தொடக்கி வைக்கப்பட உள்ள திட்டங்கள்:
1. இதில் 75 கி.மீ தொலை தூரமுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை - தேனி இடையிலான ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார்.
2. மேலும், சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார்.
மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
3. சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டம் ரூ.1800 கோடி செலவில் முடிக்கப்படும்.
4. ரூ.850 கோடி மதிப்பிலான 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம்
5. ரூ.910 கோடி மதிப்பிலான மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்- பெங்களூரு பிரிவு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்
6. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள்.
7. 262 கிலோமீட்டர் தொலைவிலான பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ.14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. இந்தச்சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரம் குறைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR