பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

Operation Lotus: ஜார்கண்ட் மாநிலத்தின் நிலைமை மற்ற மாநிலங்களிலிருந்தும் சற்று வித்தியாசமானது. ஜார்க்கண்ட் மாநில அரசியல் முக்கியமான கட்டத்தில் உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 31, 2022, 05:53 PM IST
  • "ஆபரேஷன் தாமரை" திட்டம் தோல்வி அடைந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
  • ஜார்கண்ட் மாநிலத்தின் நிலைமை மற்ற மாநிலங்களிலிருந்தும் சற்று வித்தியாசமானது.
  • ஜார்கண்டில் பாஜகவுக்கு எடியூரப்பா, சிவராஜ், ஃபட்னாவிஸ் போல ஒரு தலைவர் இல்லை.
பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா? title=

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் வெற்றி வெற்றி பெற பாஜக, பீகாரில் பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடு முழுவதும் "ஆபரேஷன் தாமரை" திட்டத்தின் மூலம், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது அல்லது ஆளும் அரசுடன் அங்கம் வகிப்பது என பாஜக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெற்றியடைந்தது. ஆனால் டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் "ஆபரேஷன் தாமரை" தோல்வி அடைந்துள்ளது. சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஆபரேஷன் லோட்டஸ்" திட்டத்தின் கீழ், தனது அரசாங்கத்தை கவிழ்க்க தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு ரூ. 20-20 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால் எங்களின் "உண்மையான நேர்மையான" எம்எல்ஏக்களால், ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது என்று கூறியுள்ளார். அது பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இங்கு தான் "ஆபரேஷன் தாமரை" திட்டம் தோல்வி அடைந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.

ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குப் பின்னால் ED, CBI, Income Tax போன்ற மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் உள்ளன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவை விசாரணையில் உள்ளன. தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதுதவிர கூட்டணி எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் இழுக்க பா.ஜ.க தொடந்து முயற்சி செய்து வருகிறது. இருந்தும் பாஜகவின் ஆபரேஷன் தாமரை பல காரணங்களால் வெற்றி பெறவில்லை. பாஜகவின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: மகாராஷ்ட்ராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் - எச்சரிக்கும் பாஜக!

பாஜகவின் ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்ததற்கு முதல் காரணம் ஜார்க்கண்ட் சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம்தான். கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெற்றியடைந்தது என்றால், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததே இதற்கு முக்கியக் காரணம். இருப்பினும், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எண்ணிகையில் இருந்து சற்று விலகி இருந்தது. இதனால் மற்ற கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தனர். பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையை விட 7 இடங்கள் மட்டுமே பின்தங்கி இருந்தது. எனவே இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" வெற்றிகரமாக இருந்தது. முன்னதாக மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸையும், பிற சிறிய உள்ளூர் கட்சிகளையும் பண பலத்தால் உடைப்பதில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தின் நிலைமை இந்த அனைத்து மாநிலங்களிலிருந்தும் சற்று வித்தியாசமானது. 

ஆபரேஷன் தாமரையின் வெற்றிக்கு பெரும் தடையாக இருப்பது ஜார்கண்ட் மாநில தலைமை தான். காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிகளின் அரசாங்கத்தை கவிழ்க்கும் பிரச்சாரம் வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம், மாநில அளவில் பாஜகவின் கட்டளை ஒரு வலிமையான தலைவரின் கைகளில் இருந்தது. பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவிலும், சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசத்திலும் அதிசயங்களைச் செய்தார்கள். மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்க வில்லை. ஆனால் ராஜ்யசபா முதல் சட்ட மேலவை வரை நடந்த தேர்தலில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை மாறி வாக்களிக்க வைத்து, சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை மகா விகாஸ் அகாதி அரசில் இருந்து பிரிக்கும் வேலையை செய்தார். ஜார்கண்டில் பாஜகவுக்கு எடியூரப்பா, சிவராஜ், ஃபட்னாவிஸ் போல ஒரு தலைவர் இல்லை.

மேலும் படிக்க: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை! மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்

ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் தோல்வி அடைந்தார். அவர்களுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்டின் சட்டசபையில் கூட்டணிக் கட்சிகள் உட்பட பாஜகவின் மொத்த எம்எல்ஏக்கள் 30 பேர். அதாவது பெரும்பான்மையை விட 11 பேர் குறைவாக இருந்தனர். மேலும் ஜார்க்கண்டில் நான்கு இடங்களிலும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது, மறுபுறம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதுமட்டுமில்லாமல் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி கவிழும் என மாநில அரசை எச்சரிக்கும் விதமாக பாஜக தலைவர்கள் முதல் நாளிலிருந்தே கூறி வருகின்றனர். மேலும் காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் ட்வீட் அல்லது அறிக்கைகள் மூலம் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். இதனால், மாநில அரசு எச்சரிக்கையானது. மேலும் அண்டை மாநிலமான பீகாரில் நடந்த அரசியல் மாற்றம், கலகம் செய்து பாஜகவுடன் செல்ல நினைத்த கூட்டணி எம்எல்ஏக்களுக்கு ஒரு பயத்தையும் அளித்துள்ளது. ஆனாலும் "ஆபரேஷன் தாமரை"ஆயுதத்தை பாஜக கீழே வைக்கவில்லை. ஆபரேஷன் தாமரையின் கீழ் வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, மாறாக, முன்பைவிட அது வேகத்தை அதிகரித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில அரசியல் முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: Tamilnadu Split : இரண்டாக பிரிகிறதா தமிழ்நாடு? பா.ஜ.க-வின் திட்டம் என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News