மகாராஷ்ட்ராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் - எச்சரிக்கும் பாஜக!

Sasikala Pushpa Warns DMK : மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் கைக்கோர்த்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகப் பதவியேற்றார். இதேபோல், திமுகவிலும் நடக்கலாம் என்று தமிழக பாஜக எச்சரித்துள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 3, 2022, 06:15 PM IST
  • ‘மகாராஷ்டிராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம்!’
  • தொடர்ந்து திமுகவை எச்சரிக்கும் தமிழக பாஜக
  • திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது - சசிகலா புஷ்பா
மகாராஷ்ட்ராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் - எச்சரிக்கும் பாஜக! title=

செய்தி - 1

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த வாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் தமிழகத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்ததுபோல், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியிலும்  அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறியது. தலைமையின் மீது போர்க்கொடி உயர்த்திய சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை மறைத்து வைத்தது, பாஜகவுடன் கைகோர்த்து, வாக்கெடுப்பு நடத்தாமலே உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது என மகாராஷ்டிராவில் நடந்தது அத்தனையும் அடுத்தடுத்த ப்ரேக்கிங்ஸ். 

மேலும் படிக்க | அதிமுக குடுமி பாஜக கையில் - திருமாவளவன் அதிரடி

எம்.எல்.ஏக்களை வைத்து கொள்ளைப்புறமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிப்பதாகவும், இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு மீறிய செயல் என்றும் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

செய்தி - 2

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதியதாக தொடங்கப்படுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா பிஷ்பா கலந்து கொண்டு புதிய விளையாட்டு அரங்கை  திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களை வலுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில்  இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து திமுக அரசு தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக அமைச்சர்களின் ஊழல்களை, பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருவதாக தெரிவித்த சசிகலா புஷ்பா, எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கலாம் என்று கூறினார். 

செய்தி - 3 

விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர் அரங்கில் நேற்று தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், யார் வேண்டுமென்றாலும் பாஜகவில் இணையலாம் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவில் இணைய தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரடிவு படப்பை 'குணாவின் மனைவி'க்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு! - யார் கொடுத்தது ?

தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பிஸியாக இருக்க, பாஜகவோ, திமுக மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News