ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து குறித்து ராகுல் காந்தி கருத்து

பயணிகள் அனைவரும் இந்த பயங்கரமான சோதனையிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2020, 09:35 PM IST
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து குறித்து ராகுல் காந்தி கருத்து title=

கேரளா: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express flight crash) விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. பைலட் (Pilot) உட்பட இரண்டு பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த கோர சம்பவம்  குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீயணைப்பு டெண்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இரவு 7.10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, விமானம் இரண்டு பகுதிகளாக உடைந்தது. ஆரம்ப அறிக்கையின்படி, விமானத்தின் பைலட்- தீபக் (வசந்த் சாத்தே விபத்தில் இறந்தார், மேலும் இணை விமானியின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

ALSO READ | Breaking news: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்திற்குள்ளானது

இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul gandhi) கருத்து தெரிவித்துள்ளார். அவர், "துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டில் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கேள்விப்பட்டேன். பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல்களுக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில், பயணிகள் அனைவரும் இந்த பயங்கரமான சோதனையிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். எனது எண்ணங்கள் இந்த நேரத்தில் குழுவினர், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடம் உள்ளன எனக் கூறியுள்ளார்.

Trending News