ரூபாய் நோட்டில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்கள்; RBI ஆலோசனை

நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் புதிய தொடர் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2022, 01:42 PM IST
  • இந்திய நாணயத்தில் மகாத்மா காந்தியின் படம் தான் எப்போதும் அச்சிடப்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கி புதிய தொடர் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டம்.
  • ரிசர்வ் வங்கி முக்கிய முயற்சிகளை செய்து வருகிறது.
ரூபாய் நோட்டில் ரவீந்திரநாத் தாகூர்,  அப்துல் கலாம் படங்கள்; RBI ஆலோசனை title=

தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் உள்ள நிலையில்,  இப்போது, தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்களையும் நோட்டுகளில்  அச்சிடுவது தொடர்பாக,  ரிசர்வ் வங்கி முக்கிய முயற்சிகளை செய்து வருகிறது.

இதுவரை இந்திய நோட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படத்தை மட்டுமே பார்த்திருக்க வேண்டும். இப்போது குருதேவ் என்று அழைக்கப்படும் ரவீந்திர நாத் தாகூர் மற்றும் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் புகைப்படமும் இந்திய நாணயத்தில் காணப்படும். இந்த இரண்டு முக்கிய மனிதர்களின் படத்தை இந்திய நாணயத்தில் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில், நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் புதிய தொடர் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. இதில், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் வாட்டர்மார்க் படத்தைக் காணலாம். அதன் வடிவமைப்பு தொடர்பான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. உயர்மட்டக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்முறையாக இப்படி ஒரு மாற்றம் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மற்ற நபர்களுடன் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. இந்திய நாணயத்தில் மகாத்மா காந்தியின் படம் தான் எப்போதும் அச்சிடப்படும்.

மாற்றத்திற்கான காரணம்

கரன்சி நோட்டுகளில் பல இலக்க நீர்குறிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோட்டுகளில் பல்வேறு வகையான படங்கள் பயன்படுத்தப்படும் வழக்கம் பல நாடுகளில் உலகில் உள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க டாலர் நோட்டுகளில் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உட்பட 19 ஆம் நூற்றாண்டின் அதிபர்களின் புகைப்படங்கள் உள்ளன.

மேலும் படிக்க | ITR e-Verification: வருமான வரி தாக்கல் பற்றிய முக்கிய தகவல், UIDAI அளித்த எளிய வழிமுறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News