Vehicle Scrappage Policy: பழைய காரின் பதிவு கட்டணம் 8 மடங்கு உயர்வு..!!

15 ஆண்டுகளுக்கும் பழமையான பஸ்கள் அல்லது லாரிகளுக்கான தகுதி சான்றிதழ், பதிவு கட்டணம் ஆகியவை 8 மடங்கு உயர்ந்த்தப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 6, 2021, 12:45 PM IST
  • தகுதி சான்றிதழை (Finess Certificate-FC) புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும்
  • பழைய காரின் பதிவு கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மத்திய மோட்டார் வாகனங்கள் (23 வது திருத்தம்) விதிகள், 2021 விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.
Vehicle Scrappage Policy: பழைய காரின் பதிவு கட்டணம் 8 மடங்கு உயர்வு..!! title=

புதுடெல்லி: வாகன உரிமையாளர்கள் தங்களது 15 ஆண்டு பழமையான கார்களை பதிவு செய்வதற்கான கட்டணம், தற்போதைய கட்டணத்தை விட எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பழைய வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த புதிய விதி மத்திய அரசின் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையின் (Vehicle Scrappage Policy)ஒரு பகுதியாகும். 

போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways) அறிவிப்பின்படி, 15 வருடங்களுக்கும் மேலான பேருந்து அல்லது லாரியின் தகுதி சான்றிதழைப் புதுப்பிக்க, எட்டு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும்.

ALSO RED | Vehicle Scrappage Policy: பழைய வாகன உரிமையாளர்களுக்கு பல சலுகைகள் ..!!

பதிவை புதுப்பிக்க, செலுத்த வேண்டிய கட்டண விபரம்

15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு காரின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம், தற்போதுள்ள ரூ.600 க்கு பதிலாக ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய பைக்கின் பதிவை புதுப்பிக்க, தற்போதைய ரூ .300 உடன் ஒப்பிடும்போது அதற்கான கட்டணம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன், 15 வருடங்களுக்கு மேல் பஸ்கள் அல்லது லாரிகளுக்கான பிட்னஸ் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.1,500 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, மத்திய மோட்டார் வாகனங்கள் (23 வது திருத்தம்) விதிகள், 2021 என்று அழைக்கப்படும் புதிய விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். வாகனத்தின் பிட்னஸ் சான்றிதழ் காலாவதியான பிறகு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அபராத கட்டணம் ரூ .50 வசூலிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை (Vehicle Scrappage Policy) பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டால், இது தொடர்பான் துறையின் ரூ .10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டமைப்பின் மூலம், அதற்கான வேலை வாய்ப்புகள் பெருகும். மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வளர்ச்சியை துரிதப்படுத்தும் இந்த கொள்கை மூலம் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு புதிய அடையாளம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 

ALSO READ | Vehicle Scrapping Policy: பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டம் விரைவில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News