வாகனங்களின் ஹார்ன்களில் இசைகருவிகள் ஒலியை பயன்படுத்த திட்டம்: நிதின் கட்கரி

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே பயன்படுத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 5, 2021, 01:04 PM IST
வாகனங்களின் ஹார்ன்களில் இசைகருவிகள் ஒலியை பயன்படுத்த திட்டம்: நிதின் கட்கரி title=

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே பயன்படுத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போலீஸார் வாகனங்கள், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்கும் வகையில் மாற்றவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார். 

நெடுஞ்சாலை திறப்பு விழா ஒன்றில் பேசிய திரு கட்கரி (Nitin Gadkari), ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தும் சைரன்களையும் ஆய்வு செய்து அவற்றை அகில இந்திய வானொலியில் (All Indian Radio) பயன்படுத்தப்படும் இசை போன்று  அதன் ஒலியை அமைப்பது  குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என குறிப்பிட்டார். 

தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலியும்  எரிச்சலையும் பதற்றத்தையும் தூண்டும் வகையில் இருப்பதோடு, காதுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்

இந்திய இசைக்கருவிகளான புல்லாங்குழல், வயலின், ஹார்மோனியம், மவுத்ஆர்கன்  ஆகியவற்றின் இசையை கொண்டு  ஹாரன் ஒலி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் இதற்காக விரைவில் சட்டமும் இயற்ற திட்டமிட்டுள்ளோம் எனவும் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

ALSO READ | Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!

 

ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள புதிய மும்பை-டெல்லி நெடுஞ்சாலை ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளது என குறிப்பிட்ட மத்திய அமைச்சர், ஆனால் அது பிவண்டி வழியாக சென்று ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் வழியாக மும்பையை அடைகிறது என குறிப்பிட்டார்.

"மத்திய அரசு, கடலில் ஒரு பாலம் கட்டி அதை பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்போடு இணைக்க திட்டமிட்டுள்ள்ளது என்றும்,  இது நிறைவேற்றப்பட்டால், நரிமன் பாயிண்டிலிருந்து டெல்லிக்கு செல்ல 12 மணிநேரம் தான் எடுக்கும் எனவும், இது மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் எனவும் கூறினார். 

ALSO READ | Education Loan: கல்விக்கடன் எடுக்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News