RSS தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று

RSS தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆர் எஸ் எஸ் ட்வீட்ஒன்றில் தகவல் அளித்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2021, 01:02 PM IST
  • இந்தியாவில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 1.31 லட்சம் புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன
  • கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கேரளா, மகாராஷ்ராவில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.
RSS தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று title=

RSS தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆர் எஸ் எஸ் ட்வீட்ஒன்றில் தகவல் அளித்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் தனது ட்வீட் ஒன்றில், "ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர், டாக்டர் மோகன் பகவத் ஜிக்கு இன்று பிற்பகல் கோவிட் -19 தொற்று இருப்பது உற்ஹ்டி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள அவர் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். '' 

70 வயதாகும் RSS தலைவர் மோகன் பகவத்தின்  உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

RSS  தலைவர் மோகன்  பகவத் அவர்களுக்கு ஏற்கெனவே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையிலும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 7 ஆம் தேதி, மோகன் பகவத்துக்கு COVID-19 தடுப்பூசி வழங்கப்பட்டது. பகவத்துடன் சேர்ந்து, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி  அவர்களுக்கும் நாக்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இருப்பினும், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

இந்தியாவில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 1.31 லட்சம் புதிய கோவிட் -19  பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் மகாராஷ்டிராவில் மட்டும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.   நாட்டில்  தொடர்ந்து மூன்றாவது நாளாக, அதிக எண்ணிக்கையிலான வழக்குகளின் தொடர்ச்சியான மூன்றாவது நாளாகும், கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயால் மேலும் 780 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சென்ற வருடம் தொடங்கிய பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கொரோன பரவல் (Corona Virus) கட்டுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அண்மையில்  மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழகம்,  ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் கொரோனா பரவல் மிக  அதிகமாக உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து : திருமலை திருப்பதி தேவஸ்தானம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News