சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 10 மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 10, 2021, 06:43 AM IST
சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் நாளுக்கு னால் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் கூறியதாவது.,

கொரோனா பரவல் (Coronavirus) சென்னையில் ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அடுத்த 45 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது. 

ஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 1,500 என உயர்ந்துள்ளது. அதன் படி 10 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் தடுப்பூசி (Corona Vaccine) போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

ALSO READ | மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

3 தெருவுக்கு ஒரு தடுப்பூசி மையம் உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் விளைவுகள் ஏதும் இல்லை. கொரோனா மையத்தை பொருத்தவரை சென்னையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

 தேர்தலினால் மட்டுமே கொரோனா தொற்று பரவியது என கூறமுடியாது. 80 லட்சம் பேர் இருக்கக்கூடிய நகரத்தில் தொற்று பரவ 80 லட்சம் வழிகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்கப்பட்டால் தான் பாதிப்பை குறைக்க முடியும்.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 4500 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் வாழும் இடமான சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரே நாளில் 1500க்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News