CSIR: பகீர் தகவல்! கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தூரத்துக்கு கொரோனா வைரஸ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை சுற்றி பத்தடி தொலைவில் கொரோனா வைரஸ் காற்றில் கலந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2021, 06:43 AM IST
  • கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தூரத்துக்கு கொரோனா வைரஸ்
  • காற்றின் வேகத்தைப் பொறுத்து மேலும் வைரஸின் பரவல் அதிகாமாகக்கூடும்
  • முகக்கவசத்தை எப்போதும் அணியவும்
CSIR: பகீர் தகவல்! கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தூரத்துக்கு கொரோனா வைரஸ்! title=

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அதேபோல் அது தன் கோரக் கரத்தை நீட்டிக் கொண்டே செல்கிறது. கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Council for Scientific and Industrial Research) கொரோனா வைரஸ் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மேற்கொண்ட ஆய்வுகளில் அண்மையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதன்படி, கொரோனா நோயாளியை (Covid Patient) சுற்றி 10 அடி தூரத்துக்கு வைரஸ் இருக்கும்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறப்படுகிறது. பொது இடங்களுக்கு செல்வதை கூடியமட்டிலும் தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது என்பவை அறிவுறுத்தல்களில் பிரதானமானவை.

Also Read | 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை சுற்றி பத்தடி தொலைவில் கொரோனா வைரஸ் காற்றில் கலந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. உண்மை தான் இது வதந்தியல்ல. கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தொலைவுக்கு வைரஸ் (Coronavirus) இருக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (Union Minister for Science and Technology) மக்களவையில் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை தெரிவித்தார். பதிலின் சாராம்சம் இதுதான். 

”அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் CSIR கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனிநபரை சுற்றிலும் 10 அடி தூரத்துக்கு வைரஸ் காற்றில் கலந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, காற்றின் வேகத்தைப் பொறுத்து, அதில் கலந்துள்ள கொரோனா வைரஸ் மேலும் அதிக தொலைவுக்கு பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது.எனவே, காற்று வழியாக கொரோனா தாக்கும் வாய்ப்பை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிவதை யாரும் தவிர்க்கக்கூடாது”.  

Also Read | உங்கள் முகக்கவசம் உண்மையில் கவசமாக இருக்க இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள்

எனவே முடிந்தவரையில் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அரசு வெளியிடும் கொரோனா தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும். தடுப்பூசி போடுவதில் தயக்கமோ தாமதமோ வேண்டாம். சமூக இடைவெளியை பராமரிக்கவும்.

இதுபோல பற்பல ஆராச்சிகள் கொரோனாவின் கொடூரத்தை மேலும் உறுதி செய்துக் கொண்டே இருக்கின்றன. நமது ஆரோக்கியம் நம் கையில் தான் இருக்கிறது. கொடிய வைரஸில் இருந்து நம்மை காப்பாற்ற இருக்கும் ஆயுதம், சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது மட்டுமே…

Also Read | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News