Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

New Chief Minister of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனவும், துணை முதல்வர் பதவி மற்றும் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எனவும் தகவல்கள்  வெளியாகியுள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : May 17, 2023, 04:19 PM IST
  • கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனத் தகவல்.
  • டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியுடன் அதிகாரமிக்க இலாகாக்கள் எனத் தகவல்.
  • ராகுல் காந்தி தரப்பில் இருந்து சித்தராமையாவுக்கு "ஆல் தி பெஸ்ட்" செய்தி.
Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு title=

Who Is New CM of Karnataka: பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகத் தகவல். காங்கிரஸ் மேலிடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதல்வர் போட்டியில் இருந்த டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியுடன் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்நேரத்தில் கர்நாடகாவின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு கன்டீரவா மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே இன்று கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பது உறுதியாக தெரிந்துவிடும்.

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? இன்று மாலை அறிவிப்பு
டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கேபிசிசி தலைவர் டிகே சிவகுமாருடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று (மே 16, செவ்வாயன்று) அவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை தனித்தனியாக சந்தித்தனர். கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. கர்நாடகாவின் புதிய முதல்வரின் பெயரை இன்று மாலை காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

சித்தராமையாவுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்ன ராகுல் காந்தி:
ராகுல் காந்தி தரப்பில் இருந்து சித்தராமையாவுக்கு ஆல் தி பெஸ்ட் அனுப்பப்பட்டதாகவும், முதல்வர் பதவியை நன்றாகக் கையாளுங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிம்லாவில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விரைவில் டெல்லி வரவுள்ள நிலையில், புதிய முதல்வர் குறித்த அறிவிப்புக்கு அவர் கிரீன் சிக்னல் கொடுப்பார் எனத் தெரிகிறது. 

மேலும் படிக்க - Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக

சித்தராமையா முதல்வர் ஆவது உறுதி?
சித்தராமையா முதல்வர் ஆவது உறுதியாகிவிட்டதால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சித்தராமையாவின் குமரகிருபா இல்லம் அருகே தொண்டர்கள் கொண்டாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றன. எனவே சித்தராமையாவின் அரசு இல்லம் அருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி:
முதல்வர் பதவிக்காக மும்முரமாக இருந்த கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் முக்கிய இலாகாக்கள் அவருக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

கன்தீரவ மைதானத்தில் பதவியேற்ப்பு விழா:
புதிய முதல்வராக சித்தராமையா நாளை (மேய் 18, வியாழக்கிழமை) பிற்பகல் பதவியேற்பார் எனத் தெரிகிறது. கடந்த முறை போல் சித்தராமையாவும் கன்தீரவ மைதானத்தில் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும், சித்தராமையாவுடன் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - DK Shivakumar Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு:
கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்நாடகா மற்றும் டெல்லியில் நடந்த பல சுற்று விவாதங்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே நடந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், இறுதியாக இன்று மாலை அடுத்த முதல்வர் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

கர்நாடகா தேர்தல் காங்கிரஸ் அமோக வெற்றி:
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

- காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி
- பாஜக 66 இடங்களில் வெற்றி
- ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 19 இடங்களில் வெற்றி

மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News