சில ஆர்வலர்களினால் வன்முறை வெடித்தது... -JNU துணைவேந்தர்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணைவேந்தர் மாமிடலா ஜகதேஷ் குமார் சனிக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வளாகத்திற்குத் திரும்பி கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

Last Updated : Jan 11, 2020, 04:19 PM IST
சில ஆர்வலர்களினால் வன்முறை வெடித்தது... -JNU துணைவேந்தர் title=

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணைவேந்தர் மாமிடலா ஜகதேஷ் குமார் சனிக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வளாகத்திற்குத் திரும்பி கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

மேலும், JNU வளாகத்திற்குள் நடைப்பெற்ற வன்முறைக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்ற அனைத்து மாணவர்களுக்கும் திரும்பி வந்து குளிர்கால செமஸ்டருக்கு தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். கிளர்ச்சி செய்யும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும், பல்கலைக்கழக வளாகத்தில் இயல்புநிலை மீட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம், வீட்டிற்குச் சென்ற அனைத்து மாணவர்களும் திரும்பி வருமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன," என்று ஜகதேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்., " ஜனவரி 13 முதல் வகுப்புகள் தொடங்குவதால்  அனைத்து மாணவர்களும் வளாகத்திற்குத் திரும்பி குளிர்கால செமஸ்டருக்கான பதிவுகளைபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று மாணவர்களுடனும் உரையாடிய துணை வேந்தர், இதன் போது ஆசிரியர்கள் குழுவால் ஆதரிக்கப்படும் சில ''ஆர்வலர் மாணவர்கள்'' பிரச்சினையை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர், மாணவர்களை விடுதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். சில ஆர்வலர்கள் உருவாக்கிய பயங்கரவாதம், எங்கள் மாணவர்கள் பலர் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு சென்றது. எங்கள் வளாகம் அமைதியான வளாகம் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் ஆர்வலர்களின் செயலால் அமைதியற்று கிடக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல சட்டவிரோத நபர்கள் விடுதிகளில் தங்கி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டானார். இதுகுறித்து அவர் பேசுகையில்., "பிரச்சனை என்னவென்றால், பல சட்டவிரோத மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள், அவர்கள் வெளியாட்களாக இருக்கலாம், அவர்கள் எந்த வன்முறையிலும் பங்கேற்கக்கூடும், ஏனெனில் அவர்களுக்கு பல்கலைக்கழகத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்று குற்றம்சாட்டினார். வளாகத்தின் சுற்றுச்சூழலுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அவர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய துணை வேந்தர் "ஆர்வலர் மாணவர்களுக்கு" ஆதரவளிக்கும் ஆசிரியர்கள் குழுவையும் அவதூறாக பேசினார்.

"ஆர்வமுள்ள மாணவர்களுடன் நின்று வளாகத்தின் சூழலைத் தொந்தரவு செய்யும் இந்த ஆசிரியர்களிடம், இந்த மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன்." எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

"தங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர விரும்பும் ஆயிரக்கணக்கான அப்பாவி மாணவர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, ஆர்வலர் மாணவர்களுடன் நிற்பதன் மூலம் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு என்ன வகையான சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் காண வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்., வளாகத்தில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜனவரி 5 அன்று மாலை, JNUSU தலைவர் ஐஷா கோஷ் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் JNU வளாகத்திற்குள் வைத்து முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். JNU-க்குள் நுழைந்து மாணவர்களையும், பேராசிரியர்களையும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கிய அந்த மர்ம கும்பல் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இதுவரை உன்மையான குற்றாவளி யார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில் தற்போது JNU துணைவேந்தர், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வளாகத்திற்குத் திரும்பி கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News