குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்

Citizenship (Amendment) Act, 2019: குடியுரிமை திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதில் அளிக்க 3 வார கால அவகாசம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 19, 2024, 05:41 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம் title=

Supreme Court, New Delhi: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட 237 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு தலைமை நீதிபதி (CJI) டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு 3 வார கால அவகாசம் அளித்து உத்தரவு. அடுத்த விசாரணை ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் என ஒத்தி வைத்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை பறிக்காது -மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியவுடன், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் 237 மனுக்களும், 10 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு பதிலளிக்க 4 வார கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும், 2014க்கு முன் நாட்டிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதில் மனுதாரர்களுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லை என்றார்.

மேலும் படிக்க - ஜஸ்ட் லைக் தட் அறிக்கை.. லெட்டர் பேட் கட்சியாக செயல்பட வேண்டாம்.. தாவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது -மனுதாரர்கள் கோரிக்கை

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், அரசுக்கு கால அவகாசம் அளிப்பதை எதிர்த்து, இந்த காலகட்டத்தில் யாருக்காவது குடியுரிமை வழங்கினால் மனுக்கள் பயனற்றதாகிவிடும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், அரசு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காலகட்டத்தில் யாருக்கும் குடியுரிமை வழங்கக்கூடாது எனக் கோரிக்கை வைத்தார்.

ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் இதற்கு உடன்படவில்லை மற்றும் உச்ச நீதிமன்றமும் அத்தகைய எந்த உத்தரவை வழங்கவில்லை.

குடியுரிமைச் சட்டம் என்றால் என்ன?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இந்து, சீக்கியர், பௌத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, டிசம்பர் 31, 2014 க்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும், அதற்குப் பிறகு வருபவர்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த பிறகு குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம். இந்த சட்டம் 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 11, 2024 அன்று அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ்  முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - CAA Act : இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு வருமா? சிஏஏ பற்றி முழு விவரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ர்திராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யக் காரணம் என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், இது அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.  இது பாரபட்சமானது. இதன் மூலம் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் சதி நடப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளன. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், நான்கு ஆண்டுகள் கழித்து லோக்சபா தேர்தலுக்கு முன், இச்சட்டத்தை அமல்படுத்தக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்ன? 

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை நிராகரித்த மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், அதை பறிப்பதற்காக அல்ல என்று கூறியுள்ளது.

இந்த சட்டம் மூலம் இந்திய குடிமக்களின் குடியுரிமை, அவர்களின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - Citizenship Amendment Act: “கவலையளிக்கிறது” சிஏஏ-வுக்கு எதிராக அமெரிக்கா கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News