Telangana Lok Sabha Elections 2024 Result : இந்தியா முழுவதும், 7 கட்டமாக நடைப்பெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியான இன்று, தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தெலங்கானா நாடாளுமன்ற தேர்தல் 2024:
நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில், முதற்கட்டமாக தமிழகத்தில் நடைப்பெற்ற இத்தேர்தல், அடுத்து நாடு முழுவதும் பல தொகுதிகளில் நடந்து முடிவடைந்தது. கடந்த 1ஆம் தேதி வெளியான தேர்தல் வாக்கெடுப்பகளுக்கு பிறகான கருத்துக்கணிப்பில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தியா கூட்டணியும் ஈடு கொடுத்து அதிக தொகுதிகளை பிடிக்கும் என கூறப்பட்டது. ஆகவே, இந்த நாடாளுமன்ற தேர்தல், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
தெலங்கானாவை பொறுத்தவரை, அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. அங்கு, தற்போது காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கையே தொடந்து ஆதிக்கம் செலுத்துமா, அல்லது தாமரை மலருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தெலங்கானாவில் அதிலாபாத், காரிமங்கர், ஜாஹிர்பாத், நாசம்பாத் உள்பட மொத்தம் 17 தொகுதிகளில் தேர்தல் நடைப்பெற்றது. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், பிஆரெஸ், அசாதுதின் ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, தெலங்கானாவில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
முன்னிலையில் யார்?
தெலங்கானவில் இந்த தேர்தலில் மொத்தம் 61.54% வாக்குகள் பதிவாகின. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது பாஜக கட்சி, மொத்தம் 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 3 இடங்களிலும், பாரத் ராஷ்ட்ர சம்ரிதி 9 இடங்களிலும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ த்தெதுல் முஸ்லிமின் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது.
தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில், அனைத்திந்திய மஜ்லிஸ் இ த்தெதுல் முஸ்லிமின் கட்சி சார்பாக போட்டியிட்ட அசாதுதின் ஓவைசி, முன்னிலை வகிக்கிறார். செகந்தராபாத்தில், பாஜக கட்சியை சேர்ந்த கிருஷ்ண ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார். அதே போல சுவெல்லா தொகுதியில், பாஜக கட்சியை சேர்ந்த கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி முதல் சுற்று முடிவில் முன்னிலை வகித்து வருகிறார். அதே போல, மல்காஜ்கிரி தொகுதியில், பாஜக கட்சியை சேர்ந்த ஈடலா ராஜேந்தர் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி, பாஜக கட்சிதான் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகிப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், காங்கிரஸ் கட்சி 12-15 தொகுதிகள் வரை வெல்லும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | Bihar Lok Sabha Election Results 2024: பிகார் மாநிலத்தின் முன்னணி நிலவரம்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ