Watch Video: வேளாண் சட்டத்தை எதிர்த்து தில்லியில் ட்ராக்டரை கொளுத்திய காங்கிரஸ் தொண்டர்கள்..!!!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 12:30 PM IST
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, இடை தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில், வேளான் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
  • நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
  • இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
Watch Video: வேளாண் சட்டத்தை எதிர்த்து தில்லியில் ட்ராக்டரை கொளுத்திய காங்கிரஸ் தொண்டர்கள்..!!! title=

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, இடை தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில், வேளான் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. 

இந்நிலையில் தில்லியில், இண்டியா கேட் பகுதியில்,  காங்கிஸ் தொண்டர்கள் ட்ராக்டர் ஒன்றை கொளுத்தி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் காலை 7:15 மணியளவில் நடந்தது. 

தீயணைப்புத் துறை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. டிராக்டரை போலீசார் அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர் 

மேலும் படிக்க | புதிய வேளாண் சட்டங்கள் குறித்து Amul நிறுவனத்தின் கருத்து என்ன..!!!

"சுமார் 15- 20 பேர் இங்கு கூடி ஒரு டிராக்டருக்கு தீ வைக்க முயன்றனர். தீ அணைக்கப்பட்டுள்ளது. ட்ராகட்ரும் டிராக்டரும் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, ”என்று தில்லி போலீசார் தெரிவித்தனர். 

ட்ராக்டரை கொளுத்தும் நபர், காங்கிரஸ் ஆதரவு கோஷங்களை எழுப்பினர் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன. 

இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வேளான் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் Ram Nath Kovind ஒப்புதல்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News