மொபைல் ரீசார்ஜ்: 28 நாள் வேலிட்டிட்டி குறித்து TRAI வழங்கிய முக்கிய உத்தரவு

TRAI புதிய விதி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என  நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2022, 06:46 AM IST
  • தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு பிறப்பித்துள்ளது
  • ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் திட்டம்
  • நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும்
மொபைல் ரீசார்ஜ்: 28 நாள் வேலிட்டிட்டி குறித்து TRAI வழங்கிய முக்கிய உத்தரவு title=

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் அவகாசம் 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு திட்டம், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை மாதம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்று TRAI கூறியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1, 2022 முதல் 1 மாத திட்டம் அவசியம்.

மேலும் படிக்க | சம்பளம் பெறும் வகுப்பினருக்கு முக்கிய செய்தி, ஓய்வூதியம் இரட்டிப்பாகுமா

ஒரு மாதம் என்ற பெயரில் 28 நாட்கள் வேலிடிட்டி 

பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு மாத ரீசார்ஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகின்றன. ஜியோ இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் புதிய  திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்து வரும் புகார்கள் 

வாடிக்கையாளர்களிடமிருந்து TRAI தொடர்ந்து புகார்களைப் பெற்று வந்தது. வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி, நிறுவனங்கள் திட்டம்/கட்டணத்தின் செல்லுபடியை குறைத்து ஒரு மாதத்திற்கு பதிலாக 28 நாட்கள் வாங்குகின்றன. இதற்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்து நுகர்வோரிடமிருந்து புகார்கள் வந்ததாக TRAI கூறியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் தகுந்த செல்லுபடியாகும் மற்றும் கால அளவு கொண்ட சேவை சலுகைகளை தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்கள் கிடைக்கும் என்று TRAI கூறியுள்ளது.

மேலும் படிக்க | PF Update: அதிர்ச்சி செய்தி!! 2021-22 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News