வன்முறை தொடர்பாக 102 பேர் மீது வழக்கு; சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய திரிபுரா காவல்துறை

102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள திரிபுரா மாநில காவல்துறை, அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2021, 07:08 AM IST
  • வன்முறை தொடர்பாக 102 பேர் மீது வழக்கு
  • கணக்குகளை முடக்க சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ்
  • திரிபுரா காவல்துறையின் கடும் நடவடிக்கை
வன்முறை தொடர்பாக 102 பேர் மீது வழக்கு; சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய திரிபுரா காவல்துறை title=

அகர்தலா: 102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)) கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அந்த நபர்களின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

முஸ்லிம்களை குறிவைத்து சமீபத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வகுப்புவாத வன்முறையை ஊக்குவித்ததாகக் கூறி, நான்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது கடுமையான சட்டம் மற்றும் ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரிபுரா காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"சில நபர்கள்/அமைப்புகள், மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சமூகங்களின் மசூதிகள் மீதான சமீபத்திய மோதல் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக ட்விட்டரில் ஆட்சேபனைக்குரிய செய்திகள்/அறிக்கைகளை வெளியிடுகின்றன. வேறு சில சம்பவங்களின் புகைப்படங்கள்/வீடியோக்கள், ஆகியவற்றைப் பகிர்ந்து, மதக் குழுக்கள்/சமூகங்களுக்கிடையில் பகைமையை ஊக்குவிப்பதற்காக தகவல்கள் திரித்தும், புனையப்பட்டும் பரப்பப்படுகின்றன. இந்தப் பதிவுகள் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு மத சமூகத்தினரிடையே வகுப்புவாதப் பதற்றத்தையும், கலவரங்களையும் தூண்டும் திறன் கொண்டவை" என்று ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read | சிறுவர்கள் பட்டாசு வெடித்து தொந்தரவு செய்ததால் ஆசிட் வீசிய நபர்!

அதே மேற்கு அகர்தலா காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 153A பிரிவின் கீழ், சமரசம் அல்லது விரோத உணர்வுகளை ஊக்குவித்தல் (promoting disharmony or feelings of enemity), 153 B பிரிவின் கீழ், குற்றச்சாட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள்(imputations, assertions prejudicial to national integration), 469 (forgery), 471 பிரிவின் கீழ், மோசடியாக அல்லது நேர்மையற்ற முறையில் போலியான ஆவணத்தைப் பயன்படுத்துதல் (fraudulently or dishonestly using as genuine a forged document), 503 பிரிவில், அச்சுறுத்தல், 504 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவில் 120பி (criminal conspiracy) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நோட்டீஸ் அனுப்பப்பட்ட 102 பேரும் காவல்துறையில் ஆஜராகி தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்" என்று அந்த அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடப்படவில்லை.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை திரிபுராவிற்கு சென்றது. அதன்பிறகு, சமூக ஊடகங்களில் சமீபத்திய வகுப்புவாத சம்பவங்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் பல பதிவுகள் செய்யப்பட்டதைக் கவனித்ததாக கூறிய மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாணிக் தாஸ், “இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இந்த பதிவுகளை அவர்கள் செய்தார்களா அல்லது போலியானவையா என்பதை காவல்துறை அறிய விரும்புகிறது,” என்று கூறினார்.

பெண்கள் உட்பட முஸ்லீம் சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஆண்டு துர்கா பூஜையின்போது, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள், வதந்திகளை பரப்பியவர்கள் மீதும், அந்த தாக்குதல்களின்போது, செயல்படாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் குழு கோரியது.

Also Read | 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு 

அந்த வழக்கறிஞர்களில், நான்கு பேர் மீது, மேற்கு அகர்தலா காவல்நிலையத்தில் நவம்பர் 3 ஆம் தேதி IPC இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. UAPA சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,  ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எஸ்டெஷாம் ஹஷ்மி, ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமித் ஸ்ரீவஸ்தவ், NCHRO தேசிய செயலாளர் அன்சார் இந்தோரி மற்றும் PUCL உறுப்பினர் முகேஷ் குமார் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வக்கீல்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், அவர்கள் தங்கள் சமூக வலைதள பதிவுகளை நீக்கிவிட்டு, நவம்பர் 10-ம் தேதிக்குள் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

அண்டை நாடான பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 26ம் தேதி நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் பேரணியின் போது, சாம்தில்லாவில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டது, இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

அருகிலுள்ள ரோவா பஜாரில் முஸ்லீம்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று வீடுகள் மற்றும் ஒரு சில கடைகளும் சூறையாடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அக்டோபர் 26 சம்பவத்திற்குப் பிறகு, திரிபுராவில் குழப்பத்தை உருவாக்கவும், மசூதி எரிவது போன்ற போலி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்வதாக மாநில அரசு அன்று குற்றம் சாட்டியது.

Read Also | மகாராஷ்டிரா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News