டெல்லி: தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நியாபகத்திற்கு வரும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதில் அலாதி பிரியம். அப்படி பட்டாசு வெடிக்கும்பொழுது சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் சண்டை சச்சரவுகள் மறுபுறம் உருவாகும் என்பதையும் தவிர்க்க முடியாது. அப்படி தான் சண்டையையும் தாண்டி இங்கு ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கைலாஷ்பூரியில் தீபாவளி தினத்தை முன்னிட்டு குழந்தைகள் வழக்கம் போல உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அந்த பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள் வியாபாராம் செய்யும் நபர் வசித்து வருகிறார். குழந்தைகள் கோலாகலமாக பட்டாசுக்களை வெடித்து கொண்டு இருந்ததால்,வெடி சத்தத்தில் இவர் எரிச்சல் அடைந்து உள்ளார்.
ALSO READ Oldest Pending Case: 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு..!!
அதனையடுத்து குழந்தைகளிடம் சென்று இங்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என கோவமாக மிரட்டலான தொனியில் குழந்தைகளை கண்டித்துள்ளார். குழந்தைகள் என்பதால் பட்டாசு வெடிக்கும் உற்சாகத்தில் அவரின் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் பட்டாசுகளை வெடிப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர் பட்டாசு வெடித்த சிறுவன் ஒருவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை அறைந்த விஷயம் கேள்விப்பட்ட குடும்பத்தினர் வந்து அந்த நபரை தட்டிக்கேட்டு விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்குள்ளும் பிரச்சனை பெரிதானது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பானது . உடனே வீட்டுக்குள் சென்ற தள்ளுவண்டி கடைக்காரர் அவரது வீட்டுக்குள் சென்று வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து வந்தார்.
அதனை தொடர்ந்து எடுத்து வந்த அந்த ஆசிட் பாட்டிலை திறந்து தன்னுடன் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென ஊற்றினார். இதில் அவருடன் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பெண்களின்(70 மற்றும் 18 வயது பெண்கள் ) மீது ஆசிட் பட்டு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைகள் மீது ஆசிட் படவில்லை. பின்னர் அந்த நபர் உடனடியாக அந்த இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்நிலையில் இந்த கோர சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிட்வீச்சுக்கு ஆளாக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த இரண்டு பெண்களும் மிக மோசமான நிலைமையில் இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் ஆசிட் வீசிய அந்த தள்ளுவண்டி கடைக்காரரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.பட்டாசு வெடித்ததால் நேர்ந்த இந்த மிக பெரிய துயரம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ லிவ்விங் டுகெதர் ஜோடிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR