மகாராஷ்டிராவில் CAA & NRC செயல்படுத்தப்படாது: உத்தவ் தாக்கரே உறுதி

மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு செயல்படுத்தப்படாது என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2019, 11:04 AM IST
மகாராஷ்டிராவில் CAA & NRC செயல்படுத்தப்படாது: உத்தவ் தாக்கரே உறுதி title=

மும்பை: இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியுரிமை திருத்தம் சட்டம்  (Citizenship Amendment Act) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (National Register of Citizens) நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார். 

நேற்று  கடாபாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், நாங்கள் என்.ஆர்.சியை எதிர்ப்போம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆந்திரா அதை ஆதரிக்க எந்த வழியும் இல்லை. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது தான் எங்கள் கட்சியின் நிலைபாடு. எனவே என்.ஆர்.சி சட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ஆந்திரா உட்பட மற்ற 10 மாநிலங்கள் என்.ஆர்.சி.யை எதிர்க்கவும், அமல்படுத்தவும் மறுக்கிறது.

முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தாக்கரே, "அரசாங்கம் எந்தவொரு தடுப்புக்காவல் நிலையத்தையும் கட்டாது. முஸ்லிம்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அஞ்சக்கூடாது என்று முஸ்லீம் தலைவர்களான உலேமாஸ் மற்றும் மவுலானாக்களின் இரண்டு தனித்தனி பிரதிநிதிகளிடம் தெளிவுப்படுத்தினார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள், மகாராஷ்டிரா முதலமைச்சரை சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் உள்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே ஆகியோரை இருந்தனர். மகாராஷ்டிராவில் CAA / NRC குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று முதல்வர் உறுதியளித்தார். இது எப்போதாவது செயல்படுத்தப்பட்டாலும், முஸ்லிம்களை அதன் ஒரு பகுதியாக ஆக்குவதை அரசாங்கம் உறுதி செய்யும்” என்று அவர் கூறினார்.

அதேபோல பல மாநில அரசு என்.ஆர்.சி., மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. அதாவது, மத்திய பிரதேச முதல்வர், பஞ்சாப் மாநில முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் கேரள முதல்வர் போன்றவர்கள், எங்கள் மாநிலத்தில் இந்த சட்டங்களை அமல் செய்யமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய சனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமார், பீகார் மாநிலத்தில் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) செயல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் என்.ஆர்.சி சட்டத்துக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில் அஸ்ஸா உடபட வடகிழக்கு மாநிலத்தில் ஆரம்பித்த போராட்டம், பிறகு டெல்லியில் மாணவர்கள் CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போரட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன்பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, CAA-NCR  சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தமிழ் நாடு என பல மாநிலங்களில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக (BJP) சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் உரையாற்றிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஒருசில கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மத்திய அரசு 1.5 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும், அவர்களிடம் மதம் குறித்து கேட்டதில்லை எனவும், குடியுரிமை சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்திய மக்களின் நலனுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.

தற்போது குடிமக்களின் தேசிய பதிவு சட்டத்தை ஆந்திரா பிரதேசம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அடுத்து, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News