உ.பி சட்டப்பேரவை தேர்தல் 2017: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஷீலா திட்சீத்

Last Updated : Jul 14, 2016, 05:10 PM IST
உ.பி சட்டப்பேரவை தேர்தல் 2017: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஷீலா திட்சீத் title=

உத்தரபிரதேச பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் சமாஜ்வாடியும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாவும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 2014 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த உ.பி.யில் வாக்குவங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஷீலா தீட்சித் நிறுத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியது. சோனியா காந்தியின் மகள் பிரியங்கா உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவராகிறார் என்றும் கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில்:-  2017-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக ஷீலா திட்சீத் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்று கூறினார். 

பிறகு ஷீலா திட்சீத் பேசுகையில்:- முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் உயர்மட்ட குழுவிற்கு நன்றி. இது மிகப்பெரிய பொறுப்பாகும். என் மீது நம்பிக்கை வைத்த காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உத்தரபிரதேச பிரதேசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று கூறிஉள்ளார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. மீண்டும் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபித்து ஆட்சியை கைப்பற்ற தேர்தல் பணியை அக்கட்சியும் தொடங்கியுள்ளது.

Trending News