ராகுலை 'பப்பு' என்று அழைத்த உபி காங்கிரஸ் தலைவர் நீக்கம்

Last Updated : Jun 14, 2017, 01:58 PM IST
ராகுலை 'பப்பு' என்று அழைத்த உபி காங்கிரஸ் தலைவர் நீக்கம் title=

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை 'பப்பு' என, அழைத்த மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

உ.பி., மாநிலம், மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய் பிரதாப் என்பவர், ' இந்தியன் நேஷனல் காங்கிரஸ்' என்ற பெயரிலான வாட்ஸ் ஆப் குழுவில் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். 

அதில் அவர்:-

அதானி, அம்பானி, மல்லையா போன்ற தொழிலதிபர்களுடன் பப்பு சேர்ந்து இருக்க முடியும்; ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. பப்புவால், ஒரு அமைச்சராகவோ, ஏன்... பிரதமராகவோ கூட ஆகியிருக்க முடியும். ஆனால், அவர் அந்த பாதையில் செல்லவில்லை. ம.பி., மாநிலத்தில் துப்பாக்கி சூட்டில் ஐந்து விவசாயிகள் உயிர் இழந்த, மண்ட்சவர் கிராமத்திற்கு தான் அவர் செல்கிறார்

இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார். 

ராகுலை அவர் பாராட்டி கருத்துக்கள் வெளியிட்டு இருந்தாலும், 'பப்பு' என, குறிப்பிட்டது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைப்பதாக, காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை தலைவர் ராமகிருஷ்ண திவேதி அறிவித்துள்ளார்.

இது குறித்து வினய் பிரதான் கூறுகையில்:-

வாட்ஸ் ஆப்பில் வெளியான, 'ஸ்கிரீன் சாட்', போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. ராகுலை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை அப்படியெல்லாம் கூற மாட்டேன். என் மீது நடவடிக்கை எடுக்கும் முன், என்னிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்' என்றார்.

Trending News