துணை ஜனாதிபதி தேர்தல் 2017: எதிர்கட்சிகளின் வேட்பாளராக காந்தி பேரன் தேர்வு

Last Updated : Jul 11, 2017, 01:23 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல் 2017: எதிர்கட்சிகளின் வேட்பாளராக காந்தி பேரன் தேர்வு title=

அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகிறார்கள். 

ஜனாதிபதி பதவியைப் போல் துணை ஜனாதிபதியின் பதவி காலமும் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதி டெல்லி மேல்–சபையின் தலைவராகவும் இருப்பார். 

வருகிற ஆகஸ்டு மாதம் 10-ம் தேதியுடன் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் முடிவடைகிறது. 

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபாலகிருஷ்ண காந்தி இதற்கு முன்பு மேற்கு வங்க மாநில ஆளுநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News