Video: திருடன் என தவறாக கருதி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

கேரளா அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் வாலிபர் மரணம்

Last Updated : Feb 23, 2018, 07:33 PM IST
Video: திருடன் என தவறாக கருதி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள் title=

கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் அடிக்கடி திருட்டு போய் உள்ளது. இந்நிலையில், அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி கையில் அரிசி மூட்டையுடன் ஒருவரை சென்றுள்ளார். அவரை பார்த்த பொதுமக்கள், திருட்டு போகும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவம் போல் இருப்பதாக கூறி அவரைப்பிடித்து பொதுமக்கள் சராமரியாக கட்டிபோட்டு அடித்தனர்.

பின்னர் போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப் பட்டார். அவரை போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றிய போது, வாகனத்திலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

பின்னர், அவரைப்பற்றி விசாரித்த போது, அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது(வயது27) என்பது தெரியவந்தது. அவரை திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தெரிவித்துள்ளனர். 

இதை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பிரிவு 174 சிஆர்பிசி கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News