கொரோனா பரவல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கூட உலகில் எந்தவொரு நாடும் வைரஸ் பாதிப்பை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை.
கொரோனா வைரஸ் கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதை முற்றிலுமாக அழிப்பது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. எனினும் தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டு நாடுகளில் பாதிப்பு குறைவாக உள்ளதோடு, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதோடு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் தேவை மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவானாலும். தொற்று எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. தொற்று வீதமும் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தினசரி கோவிட்-19 தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 4 வாரங்களுக்கு தொடர்ந்து குறைவாகவும் அதிகரிக்காமலும் இருந்தால் மட்டுமே, கொரோனா வைரஸ் தொற்று ‘எண்டமிக்’ நிலையை அடைந்து விட்டது என்று கருதலாம் என்று பிரபல வைராலஜிஸ்ட் டி ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைவாகவும், 4 வாரங்களுக்கு சிறிய ஏற்ற இறக்கங்களுடனும் சீராக இல்லை என்றால் ’எண்டமிக், என என்று அறிவிக்க முடியாது, என்றார். ஓமிக்ரான் அலை வேகமாக பலவீனமடைந்து வருவதால், சில நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று பதிப்புகள் இருக்கும் என்றும் ஜான் கூறினார், இந்த நிலைமை வருமா என்பதை அறிய 4 வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஓமிக்ரான் பரவல் தொற்றூ எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்ததை போல், மற்றொரு விசித்திரமான திரிபு நம்மை மீண்டும் ஆச்சரியப்படுத்தக்கூடும் என்று ஜான் கூறினார்.
எனும், மிகவும் ஆபத்தான மாறுபாடுகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று வைராலஜி ஆராய்ச்சி மையத்தின் நிபுணர், மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜான் கூறினார். ஓமிக்ரானை விட அதிக அலவில் பரவும் தொற்றும் மற்றும் டெல்டாவை விட ஆபத்தான ஒன்றும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார்.
தொற்றுநோயியல் நிபுணரும், தில்லியில் உள்ள மக்கள் மைய சுகாதார அமைப்புகளுக்கான அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர். சந்திரகாந்த் லஹாரியா இது குறித்து கூறுகையில், தொற்று ஆபத்தின் அளவைப் பொறுத்து வைரஸுடன் வாழும் புதிய வழிகளுக்கு மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 27,409 புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 4,26,92,943 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் சுமார் 44 நாட்களுக்குப் பிறகு, தினசரி 30 ஆயிரத்துக்கும் குறைவான தொற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 4,23,127 ஆக குறைந்துள்ளது.
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR