இறுதியில் வென்றது வாக்காளர்களே... தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!

கணிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியான போதிலும், வெளியான கணிப்புகள்....

Last Updated : Dec 12, 2018, 09:09 PM IST
இறுதியில் வென்றது வாக்காளர்களே... தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை! title=

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. தேர்தல் முடிவிற்கு பின்னர் ஆட்சி அமைப்பது யார் என்பது அனைவரும் அறிந்திருக்கு முடியும், ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு முகவர்கள் இத்தேர்தல்களில் யார் வெற்றி பெறுவர் எனும் தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகளை வெளியிட்டனர்.

இந்த கணிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியான போதிலும், வெளியான கணிப்புகள் மத்திய பிரதேச மாநிலத்தை தவிற மற்ற மாநிலங்களில் மாற்றம் அடைந்தே வந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான இக்கருத்து கணிப்புகளின் படி மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலுவும் எனவும், தெலங்கானா மாநிலத்தினை பொறுத்தவரை வழக்கம்போல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியினை பிடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தெலங்கானாவிலும் இந்த கணிப்புகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக தான் அமைந்துள்ளது. எனினும் பிற மாநிலங்களில்?...


தெலக்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிராக பாஜக, தெலுங்கு தேச கட்சி - காங்கிரஸ் கூட்டணி களம் கண்ட போதிலும் வெற்றி சந்திரசேகர ராவ்விற்கே சென்றுள்ளது.

ராஜஸ்தானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை மீட்டெடுக்கும் என அக்கட்சி தலைவர் தெரிவித்தனர். எனினும் காங்கிரஸ் இம்மாநிலங்களில் போராடி வெற்றி கண்டுள்ளது.

காங்கிரஸ் கண்ட இந்த வெற்றிக்கு காரணம்., காங்கிரஸ் மீதானா நம்பிக்கை என்பதை விட, பாஜக ஆட்சியின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை இழப்பு தான் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர பாஜக-வின் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் கல் ஊன்றினார் எனினும் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாஜக-விற்கு எதிராக எழுந்து வரும் புகார்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் முதல்வர் நாற்காலியினை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டுவிட்டது எனலாம்.

மிசோரம் மாநிலத்தினை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த முடிவினை முகவர்கள் எவரும் எதிர்பார்க்க வில்லை, மாநிலத்தில் காங்கிரஸ், மி.தே.மு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் எனவே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் முடிவு மி.தே.மு கட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது.

Trending News