கர்நாடகா: பாஜக சட்டமன்ற குழு தலைவராக எடியூரப்பா தேர்வு!

கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : May 16, 2018, 11:42 AM IST
கர்நாடகா: பாஜக சட்டமன்ற குழு தலைவராக எடியூரப்பா தேர்வு! title=

கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

234 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 12-ஆம் நாள் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் இத்தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தேறியது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் குறைவான இடங்களிலேயே (78 தொகுதிகளில்) வெற்றிப் பெற்றது. அதற்கு மாறாக பாஜக அதிக இடங்களில் (104 தொகுதிகளில்) வெற்றியை குவித்தது. இவர்களுக்கு இடையில் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களை பெற்று ஆட்சியில் இடம்பிடிக்கும் இடத்திற்கு உயர்ந்தத்து.

பிற கட்சிகள் மூன்று இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளன. கர்நாகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு எடியூரப்பா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News