#Karnataka: சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு என தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

Last Updated : May 13, 2018, 11:51 AM IST
#Karnataka: சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்! title=

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 2,622 பேர் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுவதால், கர்நாடக தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. 

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்து விட்டதாலும், ஆர்.ஆர். நகர் தொகுதியில் பத்தாயிரம் வாக்களர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்த இரு தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 222 தொகுதிகளில் மட்டும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவிடாமல் நடந்து மாலை 6 மணிக்கு முடிந்தது. இதில், காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் உற்சாகத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

மாநிலம் முழுவதும் 5 மணி நிலவரப்படி 68 சதவீதம் பதிவானதாக கூறப்பட்டது. 6 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 72.13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்ல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Trending News