2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் உள்ள குழப்பங்கள்... வங்கிகள் சொல்வது என்ன?

Rs 2000 Note Exchange: புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளில் குழப்பங்கள் ஏற்பட்டன.

Written by - Sudharsan G | Last Updated : May 23, 2023, 06:27 PM IST
  • வரும் செப். 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாம்.
  • இதை மாற்றிக்கொள்ள படிவமோ, அடையாள அட்டையோ தேவையில்லை என எஸ்பிஐ அறிவிப்பு.
  • ஆனால், ஒவ்வொரு வங்கியும் இதில் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றுகின்றன.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் உள்ள குழப்பங்கள்... வங்கிகள் சொல்வது என்ன? title=

Rs 2000 Note Exchange Bank Procedures: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை (மே 19) அன்று அறிவித்திருந்தது. அதையொட்டி, இன்று முதல் வரும் செப். 30ஆம் தேதி வரை மக்கள் தங்கள் வசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம், மற்றும் 2000 ரூபாய்களை கொடுத்து வேறு நோட்டுகளையும் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எவ்வித ஆணவங்களும், படிவங்களும் தேவையில்லை என ஆர்பிஐ, எஸ்பிஐ உள்ளிட்டவை அறிவித்திருந்தன. 

அந்த வகையில், 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் முதல் நாளான இன்றே வங்கி நடைமுறைகளில் பல குழப்பங்களும், குளறுபடிகளும் இருந்ததாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளான பான் அல்லது ஆதார், அதிகாரப்பூர்வ படிவங்களின் ஆகியவை 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு தேவை என வங்கிகள் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வெவ்வெறு நடைமுறைகள் 

2000 ரூபாய் நோட்டுகளை ஒருவர் மாற்றும்போது அல்லது டெபாசிட் செய்யும்போது முதல் நாளே பெரும் குழப்பமாக உள்ளது. சில இடங்களில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டைகளை ஆதாரமாகச் சமர்ப்பிக்கக் கோருவதாக புகார்கள் வந்துள்ளன. இது வங்கிகள் முழுவதும் நிலையான கொள்கையின் பற்றாக்குறையைக் குறிக்கிறது. 

பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அடையாளச் சான்று கேட்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியபோது, பல்வேறு நகரங்களில் உள்ள பல வங்கிகளில் அடையாள அட்டைகளை கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பல வங்கிகள் நோட்டுகளை மாற்ற மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக மக்கள் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரூ.2,000 நோட்டு விவகாரம்: ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதன் கிளைகளுக்கு அதிகாரப்பூர்வ குறிப்பில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது எந்த படிவமும் அல்லது சீட்டும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. முக்கிய வங்கிகள் அடையாளச் சான்று மற்றும் படிவங்கள் குறித்து தனித்தனி வழிகாட்டுதல்களை வைத்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு வங்கியும், அதில் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றி வருவது தெரிகிறது.

வங்கிகள் சொல்வது என்ன?

வங்கியில் 2000 ரூபாயை மாற்ற வரும்போது, அவருக்கு தங்கள் வங்கியில் கணக்கு இல்லை என்றால் படிவம்/அடையாளச் சான்று கேட்கிறோம் என்று கோட்டக் வங்கி தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யெஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவை படிவம் அல்லது அடையாளச் சான்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளன. 

ஹெச்எஸ்பிசி மற்றும் ஃபெடரல் வங்கி, தங்கள் வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கு அடையாளச் சான்று தேவை, ஆனால் படிவம் தேவையில்லை என தெரிவிக்கின்றன. பாங்க் ஆஃப் பரோடா தங்களுக்கு எந்த படிவமும் தேவையில்லை, ஆனால் கணக்கு இல்லாதவர்களுக்கு அடையாளச் சான்று தேவை என்று கூறியுள்ளது. 

அனைத்து வாடிக்கையாளர்களும் படிவங்களை நிரப்ப வேண்டும் என்று ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளன. ஆனால், தங்கள் வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே அடையாளச் சான்று தேவை என தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் எந்த படிவமும், அடையாள அட்டையும் தேவையில்லை என்று கூறியுள்ளது.

டெபாசிட் மட்டும்!

டெல்லியில் உள்ள ஒரு வாடிக்கையாளர் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடோ, இந்தியன் பேங்க் உள்ளிட்ட நான்கு வங்கிகளுக்குச் சென்றதாகவும், அவர்கள் நோட்டுகளை டெபாசிட் செய்யும்படி கேட்டு கொண்டதாகவும், ஒரு நோட்டைக் கூட மாற்ற மறுத்துவிட்டதாகவும் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு, ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது மற்றும் புதிய வழிகாட்டுதல் தேவையில்லை எனவும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. 

இதுகுறித்த கேள்விக்கு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், வங்கிகள் தங்கள் சொந்த விதிகளைப் பின்பற்றலாம் என்றும், ஆர்பிஐ ஆணையிடும் நடைமுறை எதுவும் இல்லை என்றும் கூறினார். வங்கிகள் ஆவணங்கள் அல்லது கோரிக்கைச் சீட்டுகளைக் கேட்க வேண்டுமா என்பதை ஆர்பிஐ குறிப்பாகத் தெளிவுபடுத்தாமல், நாணயப் பரிமாற்றம் மற்றும் வைப்புத்தொகைக்கு வங்கிகளுக்கு அவற்றின் சொந்த விதிகள் உள்ளன என்றார். 

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது திருப்பித் தரவோ எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்றால், கறுப்புப் பணத்தை அரசாங்கம் எப்படிக் கண்காணிக்கும் என்பது குறித்து, அவர் பதிலளித்தார். "நாங்கள் வங்கிகளை அவற்றின் தற்போதைய நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் வேறு எதையும் செய்யுமாறு நாங்கள் கேட்கவில்லை." என்றார். 

மேலும் படிக்க | அப்போதே நோ சொன்ன மோடி... ரூ. 2000 வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News