பொதுவாக வேலையில்லாதவர்கள் தான் ஆபாச படங்களை பார்ப்பார்கள் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆபாச படம் பார்ப்பதற்கு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்கிறது, அந்த வேலைக்கு முப்பதாயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த 22 வயது பெண் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரெபேக்கா டிக்சன் எனும் இந்த பெண் தற்போது இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பார்ன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவி கிடைத்தது குறித்து ரெபேக்கா கூறுகையில், 'இது அற்புதமானது, நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். உண்மையில் இதைவிட சிறப்பானது வேறெதுவும் இருக்காது, நான் எனது மகிழ்ச்சிக்காக தான் இதுவரை இதை பார்த்திருக்கேன், அதிலும் சில காட்சிகளை தவிர்த்துவிடுவேன்.
மேலும் படிக்க | தனது திருமணத்திற்கே செல்லாத எம்.எல்.ஏ - வழக்குப்பதிவு செய்த போலீஸார்!
ஆனால் தற்போது முழு படத்தையும் பார்க்கிறேன், நான் பார்த்த வரை அதிகமான வீடியோக்கள் தலைப்புகள் 'ஸ்டெப்மாம்' அல்லது 'ஸ்டெப்சிஸ்டர்' என்றுதான் இருக்கிறது' என்று கூறியுள்ளார். இவர் பகல் நேரத்தில் கார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார், அதனைத்தொடர்ந்து 'பெட்பைபிள்' நிறுவனம் நியமித்துள்ள ஆபாச படங்களை ஆராயும் பணிக்கென்று மாலை நேரத்தில் ஐந்து மணி நேரங்களை ஒதுக்குகிறார். ரெபேக்கா தினமும் எந்த வீடியோக்களை அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள், ஒவ்வொரு வீடியோவின் கால அளவு, செக்ஸ் பொசிஷன்ஸ், ஆர்காஸ்ம்களின் எண்ணிக்கை, மொழிகள் மற்றும் முடிகளின் நிறம் போன்ற அனைத்தையும் கண்காணிக்கிறார்.
இவருக்கு இந்த பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு 20USD வழங்கப்படுகிறது, இவர் குறைந்தபட்சம் சம்பளம் வாங்கும் நபர்களை விட மூன்று மடங்குகள் அதிகமாக இந்த பணிக்கு சம்பளம் வாங்குகிறார். இந்த பணியிலேயே முழு நேரமும் ஈடுபட வேண்டும் என்பதே இவரது லட்சியமாம், இந்த பணிக்காக இவர் வாரத்தில் 40 மணி நேரம் செலவிடுகிறார். ரெபேக்கா குறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேகோப் கூறுகையில், ரெபேக்கா வெளிப்படையானவர், அவர் எங்களின் சிறந்த தேர்வாக இருக்கிறார். அவர் அளித்திருந்த விண்ணப்பத்தில், நாங்கள் எதிர்பார்த்தபடியே 'எனக்கு துணிச்சலை வெளிப்படுத்துவது மற்றும் வித்தியாசமானவை குறித்து தேடுவது பிடிக்கும் என்று கூறியிருந்தார், அதோடு அவர் இதை சிறந்த வேலையாகவும் கருதுகிறார் என்று கூறினார்.
மேலும் படிக்க | OMG! உலகின் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR