மறந்தும் இந்த தப்பை செய்தா 2022 பாடாய் படுத்திவிடும்! கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்!!

ஒரு சிறிய தவறும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும், இந்த ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 06:03 AM IST
  • சிம்ம ராசிக்காரர்கள் செல்வாக்குமிக்க ஆளுமைக்காரர்கள்
  • தலைமைத்துவ குணம் பல நன்மைகளை தரும்
  • அன்னை லக்ஷ்மியை வணங்கி அளவற்ற அருளைப் பெற வேண்டிய ஆண்டு
மறந்தும் இந்த தப்பை செய்தா 2022 பாடாய் படுத்திவிடும்! கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்!! title=

புதுடெல்லி: புத்தாண்டு அனைவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். ஆனால், நாளும் கோளும் அவை இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல வேலை செய்யுமல்லவா? எனவே, ஜாதகத்திற்கு ஏற்ப, அவரவர் ராசி பலனை தெரிந்துக் கொண்டால் புத்தாண்டு, புன்னகை பூக்கும் நல்லாண்டாக மலரும்.

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் மிகவும் உக்ரமானவர். சிம்ம ராசிக்காரர்கள் (Zodiac Sign) வலுவான மற்றும் செல்வாக்குமிக்க ஆளுமைக்காரர்கள். பொதுவாக சிம்ம ராசியினர், நல்ல தலைவர்களாகவும், அரசியலிலும் நிர்வாகத்திலும் உயர் பதவிகளில் இருப்பவர்கள். பிறக்கும் புத்தாண்டு 2022 இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிம்ம ராசி 2022  (Leo Horoscope 2022) 
சிம்ம ராசிக்காரர்களின் தலைமைத்துவ குணம் அவர்களுக்கு இந்த வருடம் பல நன்மைகளை தரும். அவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள், ஆனால் ஆரோக்கியம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் சிரமப்படுவார்கள்.

தொழில்  (Leo Career Horoscope 2022): கம்பீரமான இயல்பைக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அன்னை லக்ஷ்மியை வணங்கி அவளது அளவற்ற அருளைப் பெற வேண்டிய ஆண்டாகும். வியாழன் ஏழாம் வீட்டில் அமர்ந்து வியாபாரத்தில் லாபம் தருவார். ஒன்பதில் ராகு, வெளியூரில் இருக்கும் உறவுகளால் நன்மைகளை தருவார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு, வேலைக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரியும் இடத்தில் தடைகளை ஏற்படுத்த உங்கள் எதிரி முயற்சித்தால், ஆறாம் வீட்டில் உள்ள சனி இந்த பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவார், அதோடு,  மரியாதை, பதவி மற்றும் கௌரவத்தை தருவார். பங்குச் சந்தையில் கவனமாக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

ALSO READ | Weekly Horoscope: ஆண்டின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் உள்ளது 

குடும்ப வாழ்க்கை ( Leo Family Life in 2022): இந்த ஆண்டு குடும்பத்தில் இணக்கமான நிலவும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சொத்து விஷயத்தில் பெண்கள் தரப்பில் இருந்து சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம். காதல் உறவுகள் வலுவாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு குருவை வலுப்படுத்துவது நல்லது. விலங்குகளிடம் அன்பாக இருக்கவும். 

மாணவர் வாழ்க்கை (Leo Student Horoscope 2022): இந்த ஆண்டு, 6 ஆம் வீட்டில் சனி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வார். மறுபுறம், ராகுவும் கேதுவும் வளியே சிந்திக்கும் திறனைத் தருவார்கள். நிர்வாகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.. வெளிநாட்டில் கல்வி கற்க விருப்பம் இருப்பவர்களுக்கு இது சூப்பரான ஆண்டு...
 
ஆரோக்கியம் (Leo Health Horoscope 2022): சனிபகவான் ஆறாம் வீட்டில் இருப்பதால் நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலனைத் தரும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள் (Remedies for  Leo Natives): ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆயுர்வேத மருத்துவரின் உதவியைப் பெறுங்கள். பசுவிற்கு உணவளிக்கவும். தினசரி காலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்யவும். இந்த ஆண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News