அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உணவைப் பகிர்வீர்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

உங்களுக்கு எவ்வளவு வேலைச் சுமை இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் போது உங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து உணவை சாப்பிடுவது அவசியமான ஒன்று.    

Written by - RK Spark | Last Updated : Jan 31, 2023, 09:19 AM IST
  • குழுவாக அமர்ந்து உணவு சாப்பிடுவது ஒருவகையான மனநிறைவை தரும்.
  • ஒன்றாக சாப்பிடும் குழுக்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்படும்.
  • சக ஊழியர்களுடன் சேர்ந்து உணவை சாப்பிடுவது அவசியமான ஒன்று.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உணவைப் பகிர்வீர்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க! title=

பொதுவாக தனியாக அமர்ந்து உணவு சாப்பிடுவதை விடவும், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என ஒரு குழுவாக அமர்ந்து உணவு சாப்பிடுவது என்பது ஒருவகையான மனநிறைவை தரும். அலுலகத்திற்கு செல்லும் பலர் அவர்களுடன் பணிபுரிபவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்பொழுது வேலை அல்லது தாங்கள் எதிர்கொள்ளும் பலவிதமான சவால்களை பற்றி மனம் விட்டு  வருகின்றனர்.  சக ஊழியர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் நிறுவனத்திற்கும் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.  ஒன்றாக சாப்பிடும் குழுக்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது.  உங்களுக்கு எவ்வளவு வேலைச் சுமை இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் போது உங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து உணவை சாப்பிடுவது அவசியமான ஒன்று.  

மேலும் படிக்க | bubble tea: ‘பபிள் டீ’ குடிங்க தலைவலிக்கு பாய் சொல்லுங்க..! செய்முறை - ஆரோக்கிய நன்மைகள்

நாம் படிக்கும் காலத்தில் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவதே ஒரு தனி மகிழ்ச்சி.  ஒரு சீஸி பீட்சாவாக இருந்தாலும் சரி அல்லது சிறு கேக் துண்டுகளாக இருந்தாலும் சரி உங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்தே சாப்பிட பழகுங்கள்.  உங்கள் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் அதிக கலோரிகளை உட்கொள்வது பற்றி நீங்கள் கவலைப்படலாம், ஆனால் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகளால் நீங்கள் எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கலாம். உணவு சாப்பிடுவது எவ்வளவு அவசியமோ அதைவிட முக்கியமானது நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு  ஊட்டச்சத்து மிக்கதா என்பதும்.  உங்கள் மடிக்கணினி மற்றும் பல வேளைகளில் இருந்தும் நீங்கள்  விலகியிருக்கும் ஒரே நேரம் என்றால் அது உணவு சாப்பிடும் போதுதான்.  தொற்றுநோய்க்குப் பிறகு நாம் வேலை செய்யும் முறை மாறிவிட்டது என்பது உண்மைதான் என்றாலும் இப்போது அலுவலகத்தில் இருந்து நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் சக ஊழியருடன் சேர்ந்து உணவைப் பரிமாறிக்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தனியாக சாப்பிடாமல் சக ஊழியர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:

1) மின்னஞ்சல் அல்லது போன் அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் ஓய்வு எடுத்து உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.  இதன் மூலம் உங்கள் மீதும் உங்கள் உணவின் மீதும் உங்களால்  கவனம் செலுத்த முடியும்.

2) குழுவுடன் அமர்ந்திருப்பது நெட்வொர்க்கிங் மற்றும் சமூகமயமாக்கலின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சமூக உறவுகளை உருவாக்க உதவும்.  உணவு சாப்பிடும் நேரத்தில் உங்கள் சக பணியாளரின் குணநலன்கள், கருத்துகள், குடும்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் விடுமுறைகள் போன்றவற்றைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்துகொள்ளலாம்.

3) ஒவ்வொரு நாளும் உங்கள் குழுவுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அவர்களுடன் உங்களால் ஒரு நல்லவிதமான தொடர்பினை ஏற்படுத்திட முடியும்.  இதனால் அவர்களுடன் நீங்கள் கருத்து வேறுபாடுமின்றி நல்ல முறையில் இணைந்து பணிபுரிய முடியும்.  பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உணவு விடுதி அல்லது உணவகத்தை வைத்திருப்பதற்கு இதுவே முதன்மையான காரணம்.

4) உங்கள் அருகில் அல்லது உங்கள் அணியிலுள்ள பணியாளர்கள் தவிர மற்ற அணியிலுள்ள பணியாளர்களை பற்றியும் தெரிந்துகொள்ள சிறந்த நேரம் இதுவாகும்.  மற்ற அணியை சேர்ந்தவர்களுடனோ அல்லது உங்கள் முதலாளியுடனோ நீங்கள் அமர்ந்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க | பூண்டு உடலுக்கு நல்லதுதான்! ஆனாலும் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News