புதுடெல்லி: பண பரிவர்த்தனைகளில் பான் மற்றும் ஆதார் தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றின்படி, இப்போது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், பான் எண் மற்றும் ஆதார் அட்டை குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த வரம்பு ஒரு நிதியாண்டுக்கானது. அதாவது, ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் இந்த ஆவணங்கள் தேவைப்படும். இது தவிர, பல பரிவர்த்தனைகள் புதிய விதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) மே 10ஆம் தேதி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, நீங்கள் பெரிய தொகைக்கான பரிவர்த்தனை செய்தால், நிச்சயமாக உங்கள் வங்கி மற்றும் தபால் அலுவலக கணக்குடன் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும்.
இந்த பரிவர்த்தனைகளில் பான்-ஆதார் விவரங்கள் தேவைப்படும்
1. ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், பான் மற்றும் ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்படும்.
2. ஒரு நிதியாண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்குகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் எடுத்தாலும், பான் மற்றும் ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்படும்.
3. ஒரு நபர் கூட்டுறவு வங்கி, தபால் அலுவலகம் அல்லது ஏதேனும் வங்கி நிறுவனத்தில் பண வரவு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு வைத்திருந்தால், அவர் பான் மற்றும் ஆதார் தகவல்களை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வங்கி அளிக்கும் சூப்பர் பரிசால் அமோக லாபம்
முன்பு இருந்ததிலிருந்து எவ்வளவு மாற்றம்?
தற்போது வருமான வரி தொடர்பான பணிகளுக்கு ஆதார் அல்லது பான் எண் பயன்படுத்தப்படுகிறது. வருமான வரித்துறை தொடர்பான அனைத்து பணிகளுக்கும் பான் எண்ணை வழங்குவது அவசியம். ஆனால் பெரிய ரொக்கத் தொகையை பரிவர்த்தனை செய்யும் போது, ஒரு நபருக்கு பான் இல்லை என்றால், அவர் ஆதாரைப் பயன்படுத்தலாம். விதிகளின்படி, ஒரு நபர் பான் தகவலை வழங்க வேண்டிய அவசியம் இருந்து, அவரிடம் பான் இல்லை என்றால், அவர் ஆதார் பயோமெட்ரிக் அடையாளத்தை கொடுக்கலாம்.
வருமான வரித்துறைக்கு தகவல் செல்லும்
இந்த அறிவிப்புக்கு முன், இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர் பான் எண் வைத்திருப்பதை வங்கி அதிகாரி உறுதி செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. இப்போது, வங்கி அதிகாரியும் வங்கியின் பதிவுகளில் பான் எண்ணை வைத்திருக்க வேண்டும். அத்தகைய நிதி பரிவர்த்தனைகள் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், புதிய விதிகள் வங்கிகளுக்கு மட்டுமல்ல, தபால் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்
இந்த நடவடிக்கை நிதி பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதன் கீழ், வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்கள் ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது. இது நிதி அமைப்பில் பணத்தின் நகர்வைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவும்.
மேலும் இப்படிப்படட் செயல்முறை சந்தேகத்திற்கிடமான ரொக்க டெபாசிட் மற்றும் பணம் எடுப்பது தொடர்பான செயல்பாட்டில் கண்டிப்பைக் கொண்டுவரும். பரிவர்த்தனையின் போது பான் எண்ணைக் கொடுத்தால், வரித்துறை அதிகாரிகளுக்கு பரிவர்த்தனைகளை கண்காணிப்பது எளிதாக இருக்கும்.
மேலும் படிக்க | PM-WANI: இந்திய ரயில்வே மேம்பட்ட இலவச Wi-Fi வசதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR