SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வங்கி அளிக்கும் சூப்பர் பரிசால் அமோக லாபம்

SBI Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 10:56 AM IST
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.
  • வங்கி குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.
  • திட்டம் தொடர்பான முக்கிய தகவல்கள் இதோ.
SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வங்கி அளிக்கும் சூப்பர் பரிசால் அமோக லாபம் title=

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா / பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி!! நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. 

அரசாங்கத்தின் திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பிஎம்ஜெஜெபிஒய்) ஆகியவற்றின் கீழ், எஸ்பிஐ ஆண்டுக்கு வெறும் ரூ.342 முதலீட்டில் ரூ.4 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

4 லட்சம் பம்பர் பலன் கிடைக்கும்

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட எஸ்பிஐ, 'உங்கள் தேவைக்கு ஏற்ப காப்பீடு செய்து கவலையற்ற வாழ்க்கையை வாழுங்கள். சேமிப்பு வங்கிக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் பிரீமியம் கழிக்கப்படும். ஒருவர் ஒரே ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேரத் தகுதியுடையவராவார்.’ என தெரிவித்துள்ளது

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் மகத்தான பல பலன்களை பெற முடியும். இதன் கீழ், காப்பீடு செய்யப்பட்டவர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு ஊனம் ஏற்பட்டாலோ, ரூ.2 லட்சமும், பகுதி ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இதில் பாதுகாப்பு பெறலாம்.
பிரீமியம்: இந்த திட்டத்தின் ஆண்டு பிரீமியம் ரூ.12 மட்டுமே.

மேலும் படிக்க | SBI FD வட்டி விகிதங்களை அதிகரித்தது, சமீபத்திய விகிதங்கள் இதோ 

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் மரணித்தால் நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பிரீமியம்: இந்த திட்டத்திற்கும் நீங்கள் ரூ. 330 ஆண்டு பிரீமியம் மட்டுமே செலுத்த வேண்டும்.

திட்டம் தொடர்பான முக்கிய தகவல்கள்

- இந்த காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை அதாவது ஒரு வருடம் முழுவதுக்கும் இருக்கும்.

- இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

- வங்கி கணக்கு நிறுத்தப்பட்டாலோ, அல்லது, பிரிமியம் கணக்கிலிருந்து கழிக்கப்படும் போது, கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் இருந்தாலோ, காப்பீடு ரத்துசெய்யப்படலாம்.

- இவை இரண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! இதை செய்ய வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News