Belly Fat Loss Tips Tamil : தொப்பை என்பது இப்போதைய தினசரி வாழ்க்கை முறையில் ஆண், பெண் இருபாலருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. உணவு முறை, உடற்பயிற்சியின்மை என இரண்டையும் தொப்பை வருவதற்கு முக்கிய காரணம். ஆனால், தொப்பையை குறைப்பது என்பது எளிதான விஷயம் என்றெல்லாம் சொல்லிவிட முடியும். அதை குறைக்க நீங்கள் கொஞ்சம் கடினப்பட்டு தான் ஆக வேண்டும். வாயை கட்டுப்படுத்துவதில் தொடங்கி, உடற்பயிற்சிகள் செய்வது வரை என நீங்கள் மெனக்கெட வேண்டும். எந்த பயிற்சியை செய்தால் சீக்கிரம் தொப்பையை குறைக்கலாம் என்பதற்கு வேண்டுமானால் பல ஆப்சன்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையான இரண்டு பயிற்சிகள் சைக்கிளிங் மற்றும் ஸ்கிப்பிங்.
தொப்பை குறைய சைக்கிளிங் vs ஸ்கிப்பிங்
இரண்டுமே கலோரிகளை எரிப்பதிலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த பயிற்சிகள். ஒப்பீட்டளவில் சைக்கிளிங் நீங்கள் ஊரெல்லாம் சுற்றி வரவேண்டும், ஸ்கிப்பிங் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஸ்கிப்பிங் ஆடினால் வேகமாக கலோரிகள் எரிந்து, தொப்பை சீக்கிரமாக குறையும். ஸ்கிப்பிங் உடன் ஒப்பிடும்போது சைக்கிளிங் மூலம் கலோரிகள் மெதுவாக குறையும் என்பதால் இது இரண்டாவது இடத்தையே பிடிக்கிறது.
மேலும் படிக்க | தினமும் இவ்வளவு நேரம் நடந்தால் போதும்! கிடைக்கும் அற்புத நன்மைகள்!
எந்த பயிற்சியை தேர்வு செய்யலாம்?
சைக்கிள் ஓட்டும்போது மூட்டுகளுக்கு குறைந்த அழுத்தமே ஏற்படும். வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் சைக்கிளிங் செய்யலாம். எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்கிப்பிங் என்பது அப்படியானது அல்ல. இது ஒரு கடுமையான பயிற்சி தான். ஒரே இடத்தில் நின்று கொண்டு மீண்டும் மீண்டும் நீங்கள் குதிக்கும்போது மூட்டுகள் மற்றும் தசைகள் மீது அதிக அழுத்தம் ஏற்படும். ஆனால் உடலில் இருக்கும் கலோரிகள் வேகமாக குறைந்துவிடும். உதாரணமாக, சைக்கிளிங் ஓட்டி 10 நிமிடத்தில் 10 கலோரிகளை குறைக்கிறீர்கள் என்றால், ஸ்கிப்பிங் ஆடி 5 நிமிடத்தில் அந்த கலோரிகளை குறைத்துவிடலாம். உங்களின் வசதிக்கு ஏற்ப இந்த இரண்டு பயிற்சியில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தொப்பை கொழுப்பை குறைப்பவர்கள் கவனத்திற்கு
தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஃபாட் டையட் மற்றும் பட்டினி கிடப்பது போன்ற குறுக்கு வழிமுறைகளை கையாள்கிறார்கள். அதற்கு பதிலாக தினசரி என்ற அடிப்படையில் நீண்ட நாட்களுக்கு ஒரு பயிற்சியை தேர்வு செய்து அதனை பின்பற்றுவதே சிறந்ததாகும். ஏனென்றால், பயிற்சி வழியாக மட்டுமே குறிபிட்ட இடத்தில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க முடியும். பட்டினி கிடந்தாலோ, ஃபாட் டையட் பின்பற்றினாலோ உங்களுக்கான ரிசல்ட் கிடைக்காது.
வயதானவர்கள் vs இளைஞர்கள் ; எந்த பயிற்சியை செய்யலாம்?
ஸ்கிப்பிங் மற்றும் சைக்கிளிங் என இரண்டு பயிற்சிகளும் அவரவர் உடல்நிலையை பொறுத்து தேர்வு செய்வது அவசியம். வயதானவர்கள் என்றால் சைக்கிளிங் தேர்வு செய்து கொள்ளுங்கள். எந்த வயதினரும் சைக்கிளிங் செய்யலாம். ஸ்க்கிப்பிங் என்பது இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமான உடல்நிலையை வைத்திருப்பவர்கள் மட்டுமே செய்ய முடியும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் மூட்டு, தசை பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகள் இருப்பவர்களும், இல்லாதவர்களும் அவரவர் வசதிக்கு ஏற்ப பயிற்சியை தேர்வு செய்து தொப்பை கொழுப்பை குறைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ