அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.

1 /6

சமீபத்தில் அம்பானி மகன் அனந்த் - ராதிகா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஜூலை வரை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

2 /6

உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கிரிக்கெட் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

3 /6

அம்பானி வீட்டு திருமண செலவு மட்டுமே கிட்டத்தட்ட 5000 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அம்பானி வீட்டில் வேலை பார்க்கும் கார் ஓட்டுனர்கள் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

4 /6

அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.24 லட்சம் பெறுகிறார். இது பல அரசு அதிகாரிகளின் சம்பளத்தைவிட அதிகம்.

5 /6

அம்பானி வீட்டில் உள்ள கார் ஓட்டுனர்கள், முறையான பயிற்சி மற்றும் அனுபவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் மூலம் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.  

6 /6

சொகுசு வாகனங்களை கையாள்வதில் தனி திறன் கொண்டவர்களுக்கும், சவாலான காலகட்டத்தில் துரிதமாக செயல்படும் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.