Bank Holidays in December: இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உட்பட ஏழு விடுமுறை நாட்கள் வரை RBI பட்டியலில் (Reserve Bank Of India) குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸ் மாதத்தின் நான்காவது சனிக்கிழமையில் வருவதால் அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறையாகும். எனவே, வங்கிகளுக்கு இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறை (Bank Holidays) அளிக்கப்படுகிறது. RBI விடுமுறைப் பட்டியலை மாநில வாரியான விடுமுறைகள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகைகள் என மூன்று வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
ALSO READ | Warning! வங்கிகளின் இன்று முதல் மாறுதல்கள்; என்னென்ன மாற்றங்கள்? இதோ...
இந்த குறிப்பில், இந்த விடுமுறைகள் மாநில வாரியாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதற்காக, அந்தந்த மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகள் மட்டுமே மேலே குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் விடுமுறை டிசம்பர் 3 அன்று வருகிறது, ஆனால் ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே இந்த ஆஃப் பொருந்தும். எனவே இந்த மாதம் விடுமுறை நாட்கள் எப்போது? அது எந்தெந்த மாநிலங்களுக்கு பொருத்தும் என்பதை பின்வருமாறு விரிவாக காண்போம்.
மாநில வாரியாக விடுமுறை பட்டியல் இதோ:
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா - கோவா
டிசம்பர் 18: U SoSo Tham இறந்த நாள்- ஷில்லாங்
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா (கிறிஸ்துமஸ் ஈவ்) - ஐஸ்வால், ஷில்லாங்
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் — கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்
டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஐஸ்வால்
டிசம்பர் 30: யு கியாங் நங்பா - ஷில்லாங்
டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் - ஐஸ்வால்
வார இறுதி நாட்களில் சில நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதன் முழு விவரத்தை இங்கே பார்ப்போம்.
டிசம்பர் 5: ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 11: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 12: ஞாயிற்றுக் கிழமை
டிசம்பர் 19: ஞாயிற்றுக் கிழமை
டிசம்பர் 25: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26: ஞாயிற்றுக்கிழமை
ALSO READ: Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR