Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!

தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தியாக, அக்டோபர் 1 முதல் ஏடிஎம் கார்ட், பரிவர்த்தனை கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 11:57 AM IST
  • தபால் துறை சுற்றறிக்கை வெளியிட்டது.
  • ஏடிஎம் கார்டு மற்றும் பரிவர்த்தனை தொடர்பான விதிகள் மாற்றப்பட்டன.
  • தபால் அலுவலகத்தின் புதிய கட்டணங்கள்.
Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!! title=

Post Office Savings Account ATM Charges: அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு உள்ள வாடிக்கையாளர்களுக்கு  முக்கிய செய்தியாக, அக்டோபர் 1 முதல் சில கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தபால் துறை சுற்றறிக்கை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது. தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு தொடர்பான புதிய கட்டணங்களை அறிந்து கொள்ளலாம். 

அக்டோபர் 1 முதல், தபால் அலுவலக ஏடிஎம்/டெபிட் (ATM/Debit) கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி (GST) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் 2021 , அக்டோபர் 1ம் தேதி முதல் 2022 செப்டம்பர் 30ம் தேதி வரை பொருந்தும். இந்தியா போஸ்ட் (India Post) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் தகவல்களுக்கு இப்போது ரூ.12 + ஜிஎஸ்டி வசூலிக்கும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை இழந்தால், மற்றொரு கார்டைப் பெறுவதற்கு அக்டோபர் 1 முதல் அவர்களிடம் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இது தவிர, ஏடிஎம் பின் (PIN) எண் மறந்து போனால், வேறு ஒரு பின் (PIN) எண் பெற, அக்டோபர் 1 முதல் அதற்கான கட்டணங்களும் வசூலிக்கப்படும். இதற்காக, வாடிக்கையாளர்கள் கிளைக்குச் சென்று பின் எண்ணைப் பெற வேண்டும், இதற்காக அவர்களிடம் ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சேமிப்பு கணக்கில் இருப்பு இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்காக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ALSO READ | Post Office சூப்பர் ஹிட் திட்டம்: அதிக லாபம், பாதுகாப்பான முதலீடு

இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் மேற்கொள்ளக் கூடிய இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா போஸ்டின் சொந்த ஏடிஎம்களில் முதல் ஐந்து இலவச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

இந்தியா போஸ்ட்டின் சொந்த ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, வாடிக்கையாளர்கள், முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில், மெட்ரோ நகரங்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் பருவர்த்தனைக்கும், ரூ.8 +ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் (POS) மூலம் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனையில் 1% செலுத்த வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சம் 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருக்கும். அதாவது, ஒட்டுமொத்தமாக இந்தியா போஸ்டின் வாடிக்கையாளர்கள் இப்போது சேவைகளை பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ: 7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கு பம்பர் செய்தி, டி.ஆர்-ல் 356% அதிகரிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News