ரூ. 2000 வாபஸ்.... புதிய ரூ. 1000 நோட்டுகள் வெளியிடப்படுமா? RBI அளித்த முக்கிய அப்டேட்

RBI 1000 Rupee New Update:2000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்ற பிறகு, மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2023, 10:17 AM IST
  • புதிய ரூ. 1000 நோட்டுகள் வெளியிடப்படுமா?
  • ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த தகவல் என்ன?
  • ரூ.2000 நோட்டுக்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள்.
ரூ. 2000 வாபஸ்.... புதிய ரூ. 1000 நோட்டுகள் வெளியிடப்படுமா? RBI அளித்த முக்கிய அப்டேட் title=

1000 ரூபாய் நோட்டுகள் புதுப்பிப்பு: சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) க்ளீன் நோட் பாலிசியின் கீழ் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் 4 மாதங்கள் (செப்டம்பர் 30 வரை) அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒரே நேரத்தில் நீங்கள் 2000 இன் 10 நோட்டுகளை, அதாவது ரூ. 20,000 மதிப்பிலான நோட்டுகளை மற்ற நோட்டுகளாக மாற்றலாம். ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே, 2000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்ற பிறகு, மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தற்போது நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டை வங்கிகள் பொது மக்களிடமிருந்து திரும்பப் பெறும் பணி படிப்படியாக தொடங்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அரசு புதிய 1000 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறதா என்ற கேள்வு எழும்பியுள்ளது. 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டு, புதிய 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு புழக்கத்தில் கொண்டு வரும் என சிலர் கூறி வருகிறார்கள். இந்த செய்தி குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒரு பெரிய தகவலை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த தகவல் என்ன? 

1000 ரூபாய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர், ‘தற்போது புதிய 1000 ரூபாய் நோட்டை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. இது வெறும் வதந்தி. சந்தையில் மற்ற வகை நோட்டுகள் போதிய அளவில் கிடைக்கின்றன’ என்று கூறியுள்ளார். அதே சமயம், 2000 ரூபாய் நோட்டும் தற்போதைக்கு செல்லாது. ‘செப்டம்பர் 30 வரை நோட்டை மாற்ற பொது மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வங்கியில் கூட்டத்தை கூட்ட வேண்டாம். உங்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் உள்ளது. நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்படாமல், உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். இந்த முடிவு தீவிரமாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | உஷார்!! ரூ.2000 -ஐ தொடர்ந்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் பற்றி வந்த முக்கிய அப்டேட்

இப்போது நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள நோட்டு 500 ரூபாய் நோட்டாக இருக்கும்

புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்ற வதந்திக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனுடன், 2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, இப்போது 500 ரூபாய் நோட்டுதான் நாட்டின் மிகப்பெரிய நோட்டாக இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது.

நவம்பர் 2016 இல், பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்டு அவை முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புதிய ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

ரூ.2000 நோட்டுக்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள்: 

- 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

- தனிநபர்கள் தற்போதுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

- ரூ.2000-ன் 10 நோட்டுகள், அதாவது ரூ.20,000 -ஐ ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

- 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30, 2023 வரை செல்லும், ஆனால் அவை புழக்கத்தில் இருக்காது.

- 2018-19ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

- க்ளீன் நோட் பாலிசியின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது

- 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகை ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- வணிக வங்கிக் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

- தனிநபர்கள் பரிமாற்ற வசதியை இலவசமாகப் பெறலாம்.

மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News