சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, செல்வம் செழிக்கும்

Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கப்போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 11:24 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சாதகமாக அமையும்.
  • வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
  • வேலை மாற்றத்தை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இது சாதகமான நேரம்.
சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, செல்வம் செழிக்கும் title=

ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தின் இயக்கம், அதன் சஞ்சாரம், உதயம், அஸ்தமனம் ஆகியவை மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் சனி பகவானால் நமது வாழ்வில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன. சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மக்களுக்கு அவரவர் செய்கைக்கேற்ப அவர் பலன்களை வழங்குகிறார். 

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கப்போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் முக்கியமாக 4 ராசிக்காரர்கள் மீது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனினும், இந்த தாக்கம் நல்ல வகையிலேயே பலன்களைத் தரும். இந்த ராசிக்கார்ரகளுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் வரவுள்ளன. சனியின் இந்த இயக்கத்தால் குறிப்பிட்ட மாற்றங்களைக் காணவுள்ள ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 
இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சாதகமாக அமையும். உங்கள் அதிர்ஷ்டத்திற்கான கதவு திறக்கும். முன்னேற்றத்திற்கான சிறப்பு வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். பதவி உயர்வுடன் வருமானமும் கூடும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் இன்று முதல் ராஜயோகம் 

ரிஷபம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. படிப்பு முடித்து புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இந்த காலம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.

சிம்மம்: 

வேலை மாற்றத்தை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இது சாதகமான நேரம். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். பணத்தை சேமிக்கவும் திட்டமிடுவீர்கள். முதலீட்டில் லாபம் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். பயணங்களால் நல்ல வருமானம் பெறுவீர்கள். அபரிமிதமான செல்வம் பெருகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் அதிக பணம் ஈட்ட நல்ல நேரம் இது. அரசு வேலை செய்பவர்களுக்கும் சாதகமான காலமாக இது இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் ராசிக்கு வரும் சுக்கிரன்: இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News