சனி உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்: வேலை, வர்த்தகத்தில் வேற லெவல் மாற்றம்

Astrology: சனிபகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2022, 01:31 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ராஜ போக வாழ்க்கை கிடைக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் எந்தவொரு புதிய தொழிலையும் தொடங்குவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உருவாகி வருகிறது.
சனி உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்: வேலை, வர்த்தகத்தில் வேற லெவல் மாற்றம் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் மாற்றம், நகர்வு, அமைவு மற்றும் பிற்போக்கு இயக்கம் ஆகியவை அனைத்து ராசிகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2022-ல் பல கிரகங்களின் ராசி, உதயம், அமைவிடம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கின்றன. விரைவில் கர்மபலனை அளிக்கும் சனிபகவான் உதயமாகப் போகிறார். 

சனி பகவான் ஜனவரி 22 அன்று அஸ்தமானார். இப்போது மீண்டும் பிப்ரவரி 24 அன்று உதயமாகப்போகிறார். சனிபகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சனி பகவான் உதயமாவார். இதனால் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இதன் காரணமாக ராஜ போக வாழ்க்கை கிடைக்கும். 

அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும், சம்பள உயர்வும் இருக்கும். இது தவிர, வணிகத்தில் நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது.

மேலும் படிக்க | குரு பகவானின் மாற்றத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: இக்கட்டான 32 நாட்கள் 

ரிஷபம்

பிப்ரவரி 24ல் சனிபகவான் உதயமாகும் போது ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகும். எந்தவொரு புதிய தொழிலையும் தொடங்குவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். மேலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். வேலையில் மகத்தான வெற்றி கிடைக்கும். அரசியலில் பெரிய ஆதாயம் கிடைக்கும்.

கடகம்

சனிபகவான் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் உதயமாகிறார். இதனால் ஜாதகத்தின் கேந்திரத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது. அதன் விளைவாக, கூட்டு வணிகத்தில் மிகப்பெரிய பொருளாதார நன்மைகள் உருவாகும். 

கடக ராசிக்காரர்களுக்கு தொழில் பங்குதாரர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இரும்பு, பெட்ரோலியம், சுரங்கம் போன்ற சனி கிரகம் தொடர்பான வியாபாரம் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதனுடன் துணைவியின் ஆதரவும் இக்காலத்தில் உறுதியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளால் சுகம் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கண்மூடித்தனமாக செலவு செய்யும் ராசிகள் இவைதான்: உங்க ராசியும் இதில் இருக்கா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News