புத்தாண்டுக்கு முன் மிகப்பெரிய பரிசு.. இனி வெறும் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

LPG Gas Cyliner in 450 Rupees: புத்தாண்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் தொடர்பாக நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி விலை உயர்ந்த கேஸ் சிலிண்டரால் நீங்களும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தால், தற்போது வெறும் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2023, 07:44 AM IST
  • 2023 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி, இந்த எண்ணிக்கை 33 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில், நாட்டில் மொத்த LPG நுகர்வோர் 14 கோடியாக இருந்தனர்
  • மாநில அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.52 கோடி சுமை ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு முன் மிகப்பெரிய பரிசு.. இனி வெறும் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் title=

450 ரூபாயில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்: புதிய ஆண்டுக்கு துவங்குவதற்கு முன், கேஸ் சிலிண்டர் (gas cylinder) தொடர்பாக நல்ல செய்தி தற்போது வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த கேஸ் சிலிண்டரால் நீங்களும் சிரமத்திற்குள்ளாகி இருந்தால், இப்போது வெறும் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை நீங்கள் பெறலாம். ஆம், உஜ்வாலா-பிபிஎல் கேஸ் இணைப்புதாரர்களுக்கு  (BPL Gas Connection) ராஜஸ்தான் அரசு (Rajasthan Government) இந்த மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. ராஜஸ்தானில் பஜன்லால் (CM Bhajan Lal Sharma) அரசு இந்த நிவாரணம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை  (LPG Gas cylinder) குறையும் என ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா (Bhajanlal Sharma) தெரிவித்துள்ளார். அதன்படி பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் ரூ.450க்கு மட்டுமே கிடைக்கும் என்றார். மாநில அரசின் இந்த முடிவால் உஜ்வாலா திட்டத்தின் 70 லட்சம் பிபிஎல் குடும்பங்கள் பயனடையும்.

மேலும் படிக்க | Smart India Hackathon: மத்திய அரசின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி! 1 லட்சம் பரிசு!

மாநில அரசுக்கு எவ்வளவு சுமை ஏற்படும்?
முன்னதாக ரூபாய் 450க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து அதையும் நிறைவேற்றியுள்ளது. தற்போது மத்திய அரசு உஜ்வாலா பயனாளிகளுக்கு 300 ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. தற்போது, ​​30 லட்சம் நுகர்வோர் இந்த பிரிவின் கீழ் வழக்கமான ரீஃபில்லிங் செய்து வருகின்றனர். இப்படிப் பார்த்தால், மாநில அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.52 கோடி சுமை ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு 500 ரூபாய்க்கு சிலிண்டர்களை வழங்கியது:
முன்னதாக, கடந்த 22 டிசம்பர் 2022 ஆம் ஆண்டு அன்று, காங்கிரஸின் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் அரசாங்கத்தின் முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கம் பொதுமக்களுக்கு ரூ.500 க்கு எரிவாயு / கேஸ் சிலிண்டர்களை வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. அதன்படி , கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டில், அப்போது இருந்த முதல்வர் அசோக் கெலாட் தனது வாக்குறுதியை நிறைவேற்றி 500 ரூபாய்க்கு சிலிண்டர்களை வழங்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

33 கோடி எல்பிஜி நுகர்வோர் உள்ளனர்:
டோங்கில் இருந்து ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், உஜ்வாலா குடும்பப் பெண்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று கூறினார். பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், மண் அடுப்பில் சமைப்பதில் இருந்து பெண்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயது நிரம்பிய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு முன்பு சமையல் எரிவாயு இணைப்பு எடுக்காதவராக இருக்க வேண்டும். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டின் சுமார் 9.60 கோடி பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் மொத்த LPG நுகர்வோர் 14 கோடியாக இருந்தனர், ஆனால் 2023 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி, இந்த எண்ணிக்கை 33 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | LIC Policy, Bima Jyoti Plan: எல்ஐசியின் அசத்தல் திட்டம்! தினசரி ரூ.166 முதலீட்டில் 50 லட்சம் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News