தண்ணீருக்காக காத்திற்குக்க வேண்டாம்; 29 முதல் மெட்ரோ 2.0 திட்டம்..!

சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை மெட்ரோ வாட்டர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 27, 2019, 01:09 PM IST
தண்ணீருக்காக காத்திற்குக்க வேண்டாம்; 29 முதல் மெட்ரோ 2.0 திட்டம்..! title=

சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை மெட்ரோ வாட்டர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க "Dial for Water 2.0" என்ற புதிய திட்டத்தை சென்னை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, தண்ணீருக்காக மக்கள் காத்திருப்பு காலம் 48 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தண்ணீருக்கு பதிவு செய்தால் அவர்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் தண்ணீர் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

சென்னை மக்கள் இந்த சேவையை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ வாட்டர், தனி வீடுகளில் வசிப்பவர்கள் 6000 லிட்டர் அல்லது 9000 லிட்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் ஜூலை 29-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Trending News