தாய்மையை இழிவு படுத்தியதாக ஜிலு ஜோசப் மீது புகார்!

சமீபத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய ஜிலு ஜோசப்-ன் புகைப்படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Mar 2, 2018, 01:46 PM IST
தாய்மையை இழிவு படுத்தியதாக ஜிலு ஜோசப் மீது புகார்! title=

சமீபத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய ஜிலு ஜோசப்-ன் புகைப்படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது!

வரலாற்றில் முதல் முறையாக பிரபல மலையாள பத்திரிக்கை கிரகலட்சுமி இதழ் துணிச்சலான அட்டைப் படம் ஒன்றை வெளியிட்டது. தாய் ஒருவர் தன் குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்ற அப்படம் நாடுமுழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த புகைப்படத்திற்கு மாதிரியாய் நின்ற ஜிலு ஜோசப்-னை ஆரம்பத்தில் தூற்றிய பலரும் பின்னர் படத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை பாராட்டி வருகின்றனர். 

தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போல் கொடுக்கப்பட்ட போஸ் குறித்து ஜிலு ஜோசப், தாய்ப்பால் புகட்டுவது என்பது இயல்பான நிகழ்வு. இது பெண்களுக்கு கிடைத்துள்ள வரம். இதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மீதுதான் தப்பு உள்ளதே தவிர, தாய்ப்பால் கொடுக்கும்போது மறைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

இதன் நல்ல நோக்கத்தை உணர்ந்துதான், நான் மறு பேச்சு பேசாமல் இதற்கு சம்மதித்தேன் என்று கூறினார். கன்னியாஸ்திரியாக உள்ள தனது மூத்த சகோதரியும் தனது தாயும் இதுபோல் போஸ் கொடுக்க வேண்டாம் என்று கூறினர். அவர்கள் கருத்தை நான் மதித்தபோதிலும், எனக்கு சரி என்று பட்டதை நான் செய்துவிடுவேன்.

அந்த வகையில்தான் இந்த புகைப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தேன் என்கிறார் ஜிலு ஜோசப். கிரிகலட்சுமி பத்திரிகை, இதற்காக ஜிலு ஜோசப்பை அணுகியபோது, அவர் மறுப்பேதும் கூறாமல் இதற்கு சம்மதித்துள்ளாராம் ஜிலு ஜோசப்.

இந்நிலையில் இந்த புகைப்படம் தாய்மையினை இழிவுபடுத்துவதாய் உள்ளது என, கேரள வழக்கறிஞர் வினோத் மேத்திவ் வில்சல் என்பர் கொல்லம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கின் விவரம் பின்வருமாறு...

வழக்கு எண்: cmp 972/2018
நீதிமன்றம்: கொல்லம் சி.ஜே.எம். நீதிமன்றம்

1 - பி.வி. வி. கங்காதரன்
2 - பிவி சந்திரன்
3 - எம்.பி. கோபிநாத்
4 - ஜிலு ஜோசப்
 
ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்!

Trending News