Covid-19 Vaccine Registration: இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் மற்றும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், பலர் தொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள். இந்திய அரசு 45 வயதுக்குட்பட்டவர்களுக்கும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், cowin.gov.in என்ற வலைத்தளத்திற்கு சென்று நீங்கள் இலவசமாக எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவின் போர்ட்டலுக்கு சென்று தங்களுக்கான தடுப்பூசியை (COVID-19 Vaccine) பதிவு செய்யலாம். இதற்காக, நீங்கள் அதிக நேரம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் ஒரு நீண்ட படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் சில முக்கியமான தகவல்களை நிரப்புவதன் மூலம் உங்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் போது உங்களிடம் எந்த தொகையும் வசூலிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ALSO READ | Umang App மூலம் கோவிட் தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது? முழு விவரம்!
Cowin.gov.in வலைத்தளத்தில் ஒரு நிமிடத்தில் தடுப்பூசி பதிவு செய்யுங்கள்:
நீங்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய விரும்பினால், முதலில் நீங்கள் cowin.gov.in வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு, வலைதளத்தின் மேலே வலது பக்கத்தில் மஞ்சள் நிற வண்ணதில் பதிவு (Register) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது ஒரு புதிய திரை திறக்கும், அதில் தடுப்பூசிகளுக்கான பதிவு என இருக்கும். அதற்கு கீழே உங்கள் மொபைல் எண்ணை தட்டச்சு செய்க.
இதற்குப் பிறகு உங்ககள் மொபைல் போனில் OTP ஐப் பெறுவீர்கள். OTP ஐப் பெற சிறிது நேரம் ஆகலாம். OTP ஐப் பெற்ற பின் அதை உள்ளீடவும்.
இதற்குப் பிறகு, பதிவு போர்டல் திறக்கப்படும், அதில் கோரப்பட்ட அனைத்து தகவல்களும் நிரப்ப வேண்டும்.
உங்கள் அடையாள அட்டையின் தகவலை நிரப்பவும், தடுப்பூசியின் போட்டுக்கொள்ளும் போது உங்களுடன் அதை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
தடுப்பூசியைப் பதிவுசெய்த பிறகு, உங்கள் பெயர் மற்றும் பிற தகவல்கள் எழுதப்பட்ட டோஸ் 1 இன் கீழ் தோன்றும், அதற்குக் கீழே ஒரு அட்டவணை விருப்பம் இருக்கும், அதைக் கிளிக் செய்க.
இதற்குப் பிறகு, உங்கள் பகுதி பின் எண்ணைத் தட்டச்சு செய்யவும் அல்லது உங்கள் மாவட்டத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடலில் (Search) என இருப்பதை கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, நாள் மற்றும் அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு முன்னால் வெளிப்படும். இதில் உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்யலாம்.
ALSO READ | கொரோனா - ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 61% மக்கள் கவலையாகவும் கோபமாகவும் உள்ளனர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR